நடவடிக்கை செய்தி

41 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள கஞ்சாவுடன் வடக்கு கடலில் 02 சந்தேக நபர்கள் கைப்பற்றப்பட்டனர்

யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடல் பகுதியில் 2025 அக்டோபர் 30 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, நூற்று எண்பத்தைந்து (185) கிலோகிராம் அறுநூறு (600) கிராம் கஞ்சாவை ஏற்றிச் சென்ற (01) ஒரு டிங்கியுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் மற்றும் டிங்கி (01) ஆகியன கைப்பற்றப்பட்டன.

31 Oct 2025

அனர்த்தத்திற்கு உள்ளான கேஷான் புதா 1 என்ற பல நாள் மீன்பிடிக் கப்பலில் இருந்து 04 மீனவர்கள் சிதுரல கப்பல் மூலம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர்

ஹம்பாந்தோட்டையிலிருந்து சுமார் 354 கடல் மைல் (655 கி.மீ) தொலைவில் ஆழ்கடலில் அனர்த்தத்தில் சிக்கிய கேஷான் புதா 1 என்ற பல நாள் மீன்பிடிக் கப்பலைச் சேர்ந்த நான்கு (04) மீனவர்களும், கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் கடற்படையினரால் மீட்கப்பட்டு, இன்று (2025 அக்டோபர் 31) காலை இலங்கை கடற்படைக் கப்பலான சிதுரல மூலம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

31 Oct 2025

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 793 கிலோ பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றினர்

இலங்கை கடற்படை, கடலோர காவல்படை மற்றும் புத்தளம் மதுவரி சிறப்புப் பிரிவுடன் இணைந்து, கல்பிட்டி, இப்பன்திவு தீவிலும் நீர்கொழும்பு மாஓயா களப்பு பிரதேசத்திலும் 2025 அக்டோபர் 28 ஆம் திகதி சிறப்பு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது. இதன் போது, சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சுமார் எழுநூற்று தொண்ணூற்று மூன்று (793) கிலோகிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டன.

31 Oct 2025