இலங்கை கடற்படையால், இலங்கையின் தெற்கே ஆழ்கடலில் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, நச்சு போதைப்பொருட்களை கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் உள்ளூர் பல நாள் மீன்பிடிக் படகுடன் ஆறு (06) சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்டனர். பல நாள் மீன்பிடிக் கப்பலும் சந்தேக நபர்களும் 2025 நவம்பர் 20 ஆம் திகதி தங்காலை மீன்வளத் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர். பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் நடத்திய நிபுணர் பரிசோதனையின் போது, போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் 18 பொதிகளில் 261 கிலோகிராமை விட அதிகமான ஐஸ் மற்றும் 115 கிலோகிராமை விட அதிகமான ஹெராயின் இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், போதைப்பொருள் கையிருப்புடன், ரிவால்வர் வகை மற்றும் பிஸ்டல் வகை 02 துப்பாக்கிகள் மற்றும் 02 மெகசின்களுடன் ஒரு செயற்கைக்கோள் தொலைபேசியும் அங்கு கண்டுபிடிக்கப்பட்டதுடன், பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட ஆகியோர் போதைப்பொருட்கள் மற்றும் சட்டவிரோத ஆயுதங்களை கண்காணிப்பதில் பங்கேற்றனர்.