சீரற்ற வானிலை காரணமாக ஹங்குரான்கெத்த பகுதியில் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற கடற்படை உதவி

தீவை பாதித்த பாதகமான வானிலையை எதிர்கொண்டு, மண் மேடு சரிந்து விழுந்ததால் கொஸ்கஹலந்த, மாஓயா, உனுவின்ன, ஹங்குரான்கெத்த பகுதியில் சிக்கிய ஒரு குழுவினர் கடற்படை அனர்த்த நிவாரணக் குழுக்களால் நேற்று (2025 நவம்பர் 27,) பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

அதன்படி, மாஓயாவில் உள்ள உனுவின்ன கிராமப் பகுதிக்கான ஒரே அணுகல் பாதையை மண்சரிவு அடைத்ததால், அந்தப் பகுதியில் சிக்கிய பதினேழு (17) குடும்பங்களைச் சேர்ந்த பதினெட்டு (18) குழந்தைகள் உட்பட முப்பத்தேழு (37) பேர், கடற்படை அனர்த்த நிவாரணக் குழுக்களால் உள்ளூர்வாசிகளின் உதவியுடன் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.