மன்னார் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க கூட்டு நடவடிக்கை
மன்னார், நானாட்டான், முருங்கன், விதயானகுளம் மற்றும் செட்டிகுளம் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக மீட்பதற்காக இலங்கை கடற்படை மற்றும் இராணுவத்தால் 2025 நவம்பர் 29 முதல் டிசம்பர் 01 வரை கூட்டு மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, இந்த கூட்டு மீட்பு நடவடிக்கையின் மூலம், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஐம்பத்தெட்டு (58) பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.














