மன்னாரில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 1292 கிலோகிராம் பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றப்பட்டனர்

மன்னாரின் எருக்கலம்பிட்டி கடலோரப் பகுதியில் 2025 டிசம்பர் 14 ஆம் திகதி காலை இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டு போக்குவரத்துக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த சுமார் ஆயிரத்து இருநூற்று தொண்ணூற்று இரண்டு (1292) கிலோகிராம் பீடி இலைகளுடன் ஒரு கெப் வண்டியை கடற்படையினர் கைப்பற்றினர்.

அதன்படி, மன்னார் எருக்கலம்பிட்டி கடற்கரைப் பகுதியில் வடமத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் கஜபா நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, குறிப்பிட்ட கடற்கரைப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தப்பட்டிருந்த கெப் வண்டி சோதனையிட்டனர். அந்த நேரத்தில், சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டு நாற்பது (40) பைகளில் அடைக்கப்பட்டு போக்குவரத்துக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த சுமார் ஆயிரத்து இருநூற்று தொண்ணூற்று இரண்டு (1292) கிலோகிராம் பீடி இலைகளுடன் கெப் வண்டியை கடற்படையினர் கைப்பற்றினர்.

மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் கெப் வண்டி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கலால் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.