நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பீடி இலைகளுடன் 02 சந்தேக நபர்கள் புத்தளத்தில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படையினர், 2025 டிசம்பர் 09 ஆம் திகதி கல்பிட்டி புத்தளம் விஜயகடுபொத, அஞ்சல் 61 வீதித் தடுப்பில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு அவற்றை கொண்டு செல்ல முயன்ற சுமார் ஐந்நூற்று நாற்பத்தி இரண்டு (542) கிலோகிராம் பீடி இலைகளை ஏற்றிச் சென்ற இரண்டு (02) சந்தேக நபர்களையும், ஒரு (01) கெப் வண்டியையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

11 Dec 2025