சட்டவிரோத மீன்பிடியை தடுப்பதற்காக கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 26 பேர் கைப்பற்றப்பட்டனர்
இலங்கை கடற்படை, 2025 டிசம்பர் 06 முதல் 15 வரை உள்ளூர் கடல் பகுதியை உள்ளடக்கி மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது, தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், வெடிபொருட்கள் மற்றும் சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட இருபத்தைந்து (25) நபர்களையும் பதின்மூன்று (13) டிங்கி படகுகளையும் கைப்பற்றியதுடன். மேலும், யாழ்ப்பாண சிறப்பு அதிரடிப் படையுடன் இணைந்து, விற்பனைக்கு தயார் செய்யப்பட்ட முப்பத்தாறு (36) தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் ஒரு (01) சந்தேக நபரும் கைது செய்யப்பட்டார்.
அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையால் கண்டக்குளிய கடல் பகுதியை உள்ளடக்கியும், தெற்கு கடற்படை கட்டளையால் காலி பலப்பிட்டி மற்றும் அக்குரல் கடல் பகுதியை உள்ளடக்கியும் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகளின் மூலம், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட பதின்மூன்று (13) டிங்கி படகுகளையும், இருபத்தைந்து (25) நபர்களையும் கடற்படையினர் கைது செய்தனர்.
இதேபோல், யாழ்ப்பாண சிறப்பு அதிரடிப் படையுடன் இணைந்து வடக்கு கடற்படை கட்டளை யாழ்ப்பாணப் பகுதியில் நடத்திய கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது, விற்பனைக்கு தயார் செய்யப்பட்ட முப்பத்தாறு (36) தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் ஒரு (01) சந்தேக நபர் 2025 டிசம்பர் 12 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
மேலும், இந்த நடவடிக்கைகளின் போது பிடிபட்ட சந்தேக நபர்கள், டிங்கி படகுகள் மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் புத்தளம் மீன்வள மற்றும் நீர்வளத் துறை, காலி கடலோர காவல்படை அலுவலகம் மற்றும் யாழ்ப்பாண மீன்வள ஆய்வு அலுவலகத்திடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டன.











