யாழ்ப்பாணம், மரதன்கேணியில் 02 கிலோகிராம் வெளிநாட்டு கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்
இலங்கை கடற்படையினர், யாழ்ப்பாணம் மரதன்கேணி பகுதியில் 2026 ஜனவரி 09 ஆம் திகதி பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையுடன் இணைந்து நடத்திய சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது, சுமார் இரண்டு (02) கிலோகிராம் வெளிநாட்டு கஞ்சாவுடன் சந்தேக நபரை ஒருவரை (01) கடற்படையினர் கைது செய்ததனர்.
அதன்படி, யாழ்ப்பாணத்தின் மரதன்கேணி பகுதியில் வடக்கு கடற்படை கட்டளை, பருத்தித்துறை கடற்படை பிரிவு மற்றும் நெல்லியடி பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினரால் நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர் (01) விசாரிக்கப்பட்டார். குறித்த நேரத்தில், சந்தேக நபர் (01) சுமார் இரண்டு (02) கிலோகிராம் வெளிநாட்டு கஞ்சாவுடன் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டார்.
மேலும், இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர் யாழ்ப்பாணம் சம்பியன்பத்து பகுதியைச் சேர்ந்த 19 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும், சந்தேக நபரும் வெளிநாட்டு கஞ்சா கையிருப்பும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நெல்லியடி பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டன.




