திருகோணமலை கல்லடிச்சேனை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாக ஆமை முட்டைகளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை கடற்படையினர் கைப்பற்றினர்

திருகோணமலை கல்லடிச்சேனை கடற்கரைப் பகுதியில் 2026 ஜனவரி 28 ஆம் திகதி இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, நூற்று பதினேழு (117) ஆமை முட்டைகளை சட்டவிரோதமாக வைத்திருந்த ஒரு (01) நபரை கைப்பற்றினர்.

அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் லங்காபட்டுன நிறுவனத்தினால் திருகோணமலை கல்லடிச்சேனை கடற்கரைப் பகுதியில் நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, கடற்கரையிலிருந்து சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட நூற்று பதினேழு (117) ஆமை முட்டைகளுடன் ஒரு (01) சந்தேக நபர் கைப்பற்றப்பட்டார்.

மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சந்தேக நபர் திருகோணமலை தோப்பூர் பகுதியைச் சேர்ந்த 57 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மேலும், சந்தேக நபரும் ஆமை முட்டைகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சேருநுவர வனவிலங்கு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.