மன்னார், நச்சிக்குடா கடற்கரைப் பகுதியில் கடற்படையினரால் ஆமை இறைச்சி மற்றும் முட்டைகளுடன் 03 சந்தேக நபர்கள் கைது
மன்னார் நச்சிக்குடா கடற்கரைப் பகுதியில் 2026 ஜனவரி 31 ஆம் திகதி இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் பதினேழு (17) கிலோகிராம் ஆமை இறைச்சி, முப்பத்தொன்பது (39) ஆமை முட்டைகள் மற்றும் ஒரு (01) டிங்கி படகுடன் மூன்று (03) சந்தேக நபர்களைக் கடற்படையினர் கைப்பற்றினர்.
அதன்படி, மன்னாரின் நச்சிக்குடா கடற்கரைப் பகுதியில், வட மத்திய கடற்படை கட்டளையைச் சேர்ந்த இலங்கை கடற்படை கப்பல் புவனேக நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு ஒன்று சோதனை செய்யப்பட்டது. அந்த நேரத்தில், சட்டவிரோத விற்பனைக்கு தயாராக இருந்த சுமார் பதினேழு (17) கிலோகிராம் ஆமை இறைச்சி, முப்பத்தொன்பது (39) ஆமை முட்டைகள் மற்றும் ஒரு (01) டிங்கி படகுடன் மூன்று (03) சந்தேக நபர்களை கடற்படையினர் கைப்பற்றினர்.
மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மன்னார், நச்சிக்குடா பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இவர்கள் 26 முதல் 32 வயதுக்குட்பட்டவர்கள். மேலும், சந்தேக நபர்கள், ஆமை இறைச்சி, ஆமை முட்டைகள் மற்றும் டிங்கி படகு ஆகியவற்றை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி வனவிலங்கு அலுவலகத்திடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.





