வத்தளையில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 744,500 மருந்து மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன
இலங்கை கடற்படையினர், காவல்துறையுடன் இணைந்து 2026 பெப்பரவரி 02 ஆம் திகதி வத்தளை பகுதியில் ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்ய முயன்ற சுமார் எழுநூற்று நாற்பத்து நான்காயிரத்து ஐநூறு (744500) மருந்து மாத்திரைகளை (Pregabalin Capsules) ஏற்றிச் சென்ற ஒரு (01) லொரியுடன் இரண்டு (02) சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைது செய்தனர்.
அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜய, மேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல்கள் ரங்கல மற்றும் கெமுனு மற்றும் வத்தளை காவல் நிலையம் ஆகியவை வத்தளை பகுதியில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான லொரி ஒன்று (01) கண்காணிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. குறித்த லொரியில் இருந்து, சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் எழுநூற்று நாற்பத்து நான்காயிரத்து ஐநூறு (744,500) மருந்து மாத்திரைகளுடன் (Pregabalin Capsules) இரண்டு (02) சந்தேக நபர்கள் மற்றும் குறித்த லொரியும் (01) இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
மேலும், இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சந்தேக நபர்கள் 28 முதல் 32 வயதுக்குட்பட்ட கல்பிட்டி மற்றும் கோலைகனை பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன், மேலும் குறித்த சந்தேக நபர்கள், மருந்து மாத்திரைகள், சந்தேக நபர்கள் மற்றும் லொரி ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வத்தளை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.


