நடவடிக்கை செய்தி
சிலாபத்தில் சட்டவிரோதமாக நாட்டிற்கு கடத்தப்பட்ட 1400 கிலோகிராம் பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றினர்
இலங்கை கடற்படையினர், கடலோர காவல்படையுடன் இணைந்து, சிலாபம், முத்துபந்திய மற்றும் ஆரச்சிகடட்டுவவில் உள்ள வைரம்கட்டுவ பகுதியில் 2026 பிப்ரவரி 17, அன்று நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, போக்குவரத்துக்கு தயாராகி நாட்டிற்கு கொண்டு வர முயற்சித்த சுமார் ஆயிரத்து நானூற்று ஏழு (1407) கிலோகிராம் பீடி இலைகளுடன் இரண்டு (02) சந்தேக நபர்களும் ஒரு (01) லொரியையும் கடற்படையினர் கைப்பற்றினர்.
18 Feb 2026
சட்டவிரோதமாக 9,000 வெளிநாட்டு சிகரெட்டுகளை வைத்திருந்த சந்தேக நபர் கைது
இலங்கை கடற்படை, கோனஹேன பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையுடன் இணைந்து வத்தளை ஹெதல பகுதியில் நடத்திய சிறப்பு கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் விளைவாக, சட்டவிரோதமாக ஒன்பதாயிரம் (9000) வெளிநாட்டு சிகரெட்டுகளை வைத்திருந்து கொண்டு சென்ற ஒரு நபருடன் (01) ஒரு முச்சக்கர வண்டி 2026 பிப்ரவரி 17 அன்று கைப்பற்றப்பட்டன.
18 Feb 2026


