கிளிநொச்சி, இரணைதீவு மேற்கு கடற்பரப்பில் இரவில் சட்டவிரோதமாக சுழியோடி, கடல் அட்டை பிடியில் ஈடுபட்ட 10 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்
இலங்கை கடற்படையினர், கிளிநொச்சியின் இரணைதீவு மேற்கு கடல் பகுதியில் 2026 பிப்ரவரி 23 ஆம் திகதி அதிகாலை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோதமாக இரவு நேரத்தில் சுழியோடி, கடல் அட்டை பிடியில் ஈடுபட்ட பத்து (10) நபர்களையும், ஆயிரத்து இருநூற்று முப்பத்திரண்டு (1232) கடல் அட்டைகள், மூன்று (03) டிங்கி படகுகள் மற்றும் சுழியோடி உபகரணங்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.
அதன்படி, கிளிநொச்சி, இரணைதீவு மேற்கு கடல் பகுதியில் வட மத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் புவனெக நிறுவனம் நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, மூன்று (03) சந்தேகத்திற்கிடமான டிங்கி படகுகள் சோதனை செய்யப்பட்டன. அங்கு சட்டவிரோதமாக இரவு நேர சுழியோடளில் ஈடுபட்ட பத்து (10) நபர்கள், ஆயிரத்து இருநூற்று முப்பத்திரண்டு (1232) கடல் அட்டைகள், மூன்று (03) டிங்கி படகுகள் மற்றும் சுழியோடி உபகரணங்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சந்தேக நபர்கள் 29 முதல் 54 வயதுக்குட்பட்ட பள்ளிமுனை மற்றும் மன்னார் பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள், கடல் அட்டைகள், டிங்கி படகுகள் மற்றும் சுழியோடி உபகரணங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டன.





