நடவடிக்கை செய்தி
கிளிநொச்சி, இரணைதீவு மேற்கு கடற்பரப்பில் இரவில் சட்டவிரோதமாக சுழியோடி, கடல் அட்டை பிடியில் ஈடுபட்ட 10 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்
இலங்கை கடற்படையினர், கிளிநொச்சியின் இரணைதீவு மேற்கு கடல் பகுதியில் 2026 பிப்ரவரி 23 ஆம் திகதி அதிகாலை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோதமாக இரவு நேரத்தில் சுழியோடி, கடல் அட்டை பிடியில் ஈடுபட்ட பத்து (10) நபர்களையும், ஆயிரத்து இருநூற்று முப்பத்திரண்டு (1232) கடல் அட்டைகள், மூன்று (03) டிங்கி படகுகள் மற்றும் சுழியோடி உபகரணங்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.
23 Feb 2026
புத்தளம், சாலியவெவ பகுதியில் 02 கிலோகிராம் வெளிநாட்டு கஞ்சாவுடன் சந்தேக நபரொருவர் கைது
இலங்கை கடற்படை, மன்னார் குற்றப் புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து, 2026 பிப்ரவரி 22 ஆம் திகதி புத்தளம் சாலியவெவ பகுதியில் நடத்தப்பட்ட சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது சுமார் இரண்டு (02) கிலோகிராம் வெளிநாட்டு கஞ்சா, ஒரு (01) சந்தேக நபர் மற்றும் ஒரு (01) மோட்டார் சைக்கிள் ஆகியவை கைப்பற்றப்பட்டது.
23 Feb 2026


