கிளிநொச்சியில் ரூ.15 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள வெளிநாட்டு கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
கிளிநொச்சி டெவில்ஸ் பொய்ண்ட் கடல் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த கடல் பகுதியில் மிதந்த சுமார் எழுபத்தெட்டு (78) கிலோகிராம் மற்றும் முன்னூறு (300) கிராம் வெளிநாட்டு கஞ்சாவை கடற்படை 2026 மார்ச் 13 ஆம் திகதி கடட்படையினரால் கைப்பற்றப்பட்டது.
அதன்படி, கிளிநொச்சியின் டெவில்ஸ் பொய்ண்ட் கடல் பகுதியில் வட மத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் புவனேகவுடன் இணைக்கப்பட்ட விரைவு நடவடிக்கை படைப்பிரிவை பயன்படுத்தி சிறப்பு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. குறித்த கடல் பகுதியில் மிதக்கும் எட்டு (08) சந்தேகத்திற்கிடமான பார்சல்களை சோதனை செய்தபோது, அந்தப் பார்சல்களில் அடைக்கப்பட்டிருந்த எழுபத்தெட்டு (78) கிலோகிராம் மற்றும் முன்னூறு (300) கிராம் வெளிநாட்டு கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றினர்.
இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு கஞ்சா, கடற்படையின் நடவடிக்கைகள் காரணமாக தரையிறங்க முடியாததால் கடலில் கைவிடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு கஞ்சா கையிருப்பின் மொத்த தெரு மதிப்பு 15 மில்லியன் ரூபாய்க்கு மேல் என்று நம்பப்படுகிறது.
மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு கஞ்சா தொகை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சியில் உள்ள ஜெயபுரம் காவல் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டது.




