சிலாபம் கடற்பகுதியில் சட்டவிரோதமாகக் கடலுக்குள் கடத்தப்பட்ட 1273 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினரால் சிலாபம் கடற்பகுதியில் 2026 மார்ச் 15 ஆம் திகதி நடத்தப்பட்ட ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வந்த சுமார் ஆயிரத்து இருநூற்று எழுபத்து மூன்று (1273) கிலோகிராம் பீடி இலைகளை ஏற்றிச் சென்ற டிங்கி படகொன்றுடன் (01) இரண்டு (02) சந்தேக நபர்கள் கடற்படையினர் கைது செய்யப்பட்டனர்.

அதன்படி, சிலாபம் கடற்பகுதியில் மேற்கு கடற்படை கட்டளையகத்தைச் சேர்ந்த ஒரு கடற்படை படகின் மூலம், நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் சென்று கொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான ஒரு டிங்கி படகு ஆய்வு செய்யப்பட்டது. பின் கடற்படையினர் அந்தச் சிறிய படகையும், முப்பத்தி நான்கு (34) பைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் ஆயிரத்து இருநூற்று எழுபத்தி மூன்று (1273) கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகளுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் மற்றும் குறித்த படகு ஆகியவற்றை கடற்படையினர் கைது செய்தனர்.

மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள், சந்தேக நபர்கள் மற்றும் டிங்கி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கொழும்பு துறைமுகத்தில் உள்ள சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.