உள்ளூர் கடல் பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடித்ததற்காக, வட கடற்பரப்பில் இந்திய மீன்பிடி படகை கடற்படையினர் கைப்பற்றினர்
2026 ஏப்ரல் 11 ஆம் திகதி இரவு, யாழ்ப்பாணத்தின் காரைநகர் கோவிளம் பகுதிக்கு அருகிலுள்ள இலங்கை எல்லைக்குட்பட்ட கடற்பரப்பில் இலங்கை கடற்படை நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஒரு (01) இந்திய மீன்பிடிக் படகையும் பன்னிரண்டு (12) இந்திய மீனவர்களையும் கைது செய்தனர்.
அதன்படி, 2026 ஏப்ரல் 11 ஆம் திகதி இரவு, யாழ்ப்பாணத்தில் உள்ள காரைநகர் கோவிளம் பகுதிக்கு அருகிலுள்ள உள்ளூர் கடற்பகுதிக்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பல இந்திய மீன்பிடிப் படகுகளை வடக்கு கடற்படை கட்டளைப்பிரிவு கண்டறிந்தது. அதனைத் தொடர்ந்து, வடக்கு கடற்படை கட்டளைப்பிரிவுக்குச் சொந்தமான படகை பயன்படுத்தி, அந்த மீன்பிடிப் படகுகளை இலங்கை கடற்பரப்பிலிருந்து அகற்றுவதற்காக ஒரு சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.அப்போது, உள்ளூர் கடல் எல்லைக்குள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டிருந்த ஒரு இந்திய மீன்பிடிப் படகை (01) இலங்கை கடற்படை சட்டப்பூர்வமாக ஏறி ஆய்வு செய்ததுடன், மேலும் எல்லைச் சட்டங்களை மீறி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த அந்த இந்திய மீன்பிடிக் படகுடன் (01) பன்னிரண்டு (12) இந்திய மீனாவார்களையும் கடற்படையினர் கைப்பற்றினார்.
மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையால் கைது செய்யப்பட்ட இந்திய மீன்பிடி படகையும் இந்திய மீனவர்களையும், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாண காங்கேசன்துரை மீன்பிடி ஆய்வாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.




