மன்னார் வங்காலை கடற்கரைப் பகுதியில் ஆமை இறைச்சிக் கையிருப்புடன் 3 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படை, 2026 ஏப்ரல் 14 அன்று மன்னார் வங்காலை கடற்கரையில் நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, ஒரு (01) டிங்கி மற்றும் மூன்று (03) சந்தேக நபர்களிடமிருந்து இருபத்தாறு (26) கிலோகிராமுக்கும் அதிகமான ஆமை இறைச்சி கைப்பற்றப்பட்டது.

அதன்படி, மன்னாரின் வங்காலை கடலோரப் பகுதியில் வட மத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பலான புஸ்ஸதேவ நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான ஒரு டிங்கி படகு சோதனை செய்யப்பட்டது. அங்கு, இருபத்தாறு (26) கிலோகிராமுக்கும் அதிகமான ஆமை இறைச்சி மற்றும் மூன்று (03) சந்தேக நபர்களுடன் அந்த டிங்கி படகும் (01) கடற்படையால் கைப்பற்றப்பட்டது.

மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட சந்தேக நபர்கள், மன்னார் பகுதியைச் சேர்ந்த 40 முதல் 41 வயதுக்குட்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், சந்தேக நபர்கள், ஆமை இறைச்சி மற்றும் டிங்கி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மன்னார் வனவிலங்கு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.