கல்பிட்டியில் சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட 1,300 கிலோகிராமை விட அதிகமான பீடி இலைகளை கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படையினர், 2026 ஏப்ரல் 18 ஆம் திகதி கல்பிட்டிய குடாவப் பகுதியில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 1,300 கிலோகிராமை விட அதிகமான பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பலான விஜய நடத்திய இந்த சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது, குடாவ பகுதியில் ஒரு புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நாற்பத்திரண்டு (42) சந்தேகத்திற்கிடமான பைகள் சோதனை செய்யப்பட்டன. அங்கு, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு கடத்தல்காரர்களால் மறைத்து வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் ஆயிரத்து முந்நூற்று இரண்டு (1,302) கிலோகிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள், மேலதிக சட்ட நடவடிக்கைக்காக புத்தளம் கலால் திணைக்கள அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.




