நடவடிக்கை செய்தி

கடற்படை வெள்ள நிவாரணக் குழுக்கள் நிவாரண நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது

இலங்கையை பாதித்த சீரற்ற காலநிலை காரணமாக பெய்து வரும் கடும் மழையால் மேற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அதன் படி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் ஒருங்கிணைந்து செயற்படும் 07 கடற்படை வெள்ள நிவாரணக் குழுக்கள் கம்பஹ, கொழும்பு மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த நிவாரணக் குழுக்கள் இன்று (15 அக்டோபர் 2024) வெள்ள நிவாரணப் பணிகளைத் தொடர்கின்றன.

15 Oct 2024

சீரற்ற காலநிலைக்கு மத்தியில் கடற்படை வெள்ள நிவாரணக் குழுக்கள் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன

இலங்கையை பாதித்த சீரற்ற காலநிலை காரணமாக பெய்து வரும் கடும் மழையால் மேல் மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அதன் படி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் (DMC) ஒருங்கிணைந்து செயற்படும் 08 கடற்படை வெள்ள நிவாரணக் குழுக்கள் கம்பஹ, கொழும்பு மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த நிவாரணக் குழுக்கள் இன்று (14 அக்டோபர் 2024) வெள்ள நிவாரணப் பணிகளைத் தொடர்கின்றன.

14 Oct 2024

கடற்படையின் வெள்ள அனர்த்த மீட்புக் குழுக்கள் தொடர்ந்து மேல் மாகாணத்தில் அனர்த்த நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன

பெய்து வரும் கடும் மழை காரணமாக மேல் மாகாணத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் ஒருங்கிணைந்து செயற்படும் கடற்படை வெள்ள நிவாரணக் குழுக்கள் கம்பஹ மற்றும் கொழும்பு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த நிவாரணக் குழுக்கள் இன்று (13 அக்டோபர் 2024) வெள்ள நிவாரணப் பணிகளைத் தொடர்கின்றன.

13 Oct 2024

மேல் மாகாணத்தின் பல பகுதிகளுக்கு கடற்படை வெள்ள அனர்த்த நிவாரண குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன

சீரற்ற காலநிலையினால் பெய்த கடும் மழையினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இன்று (12 ஒக்டோபர் 2024) மேற்கு மாகாணத்தின் கம்பஹ மற்றும் கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு கடற்படையின் ஆறு (06) வெள்ள அனர்த்த நிவாரணக் குழுக்களை அனுப்பியுள்ளது.

12 Oct 2024

செல்லுபடியாகும் மீன்பிடி அனுமதிப்பத்திரங்கள் இன்றி கிழக்கு கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட 04 பேர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் திருகோணமலை அரிசிமலை கடற்பகுதியில் 2024 ஒக்டோபர் 09 ஆம் திகதி மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது செல்லுபடியாகும் மீன்பிடி அனுமதிப்பத்திரங்கள் இன்றி மீன்பிடியில் ஈடுபட்ட நால்வர் (01), ஒரு மீன்பிடி படகு மற்றும் மீன்பிடி உபகரணங்கள் கைப்பற்றினர்.

10 Oct 2024

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 04 இந்திய மீன்பிடி படகுகள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படை மற்றும் கடலோரக் காவல் திணைக்களம் இணைந்து 2024 ஒக்டோபர் 09 ஆம் திகதி யாழ்ப்பாணம், நெடுந்தீவுக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்டுள்ள விசேட நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு (04) இந்திய மீன்பிடி படகுகளுடன் 21 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

10 Oct 2024

சுமார் ஆறு இலட்சம் (600,000) போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் (01) கைது

இலங்கை கடற்படையினர் மற்றும் இலங்கை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து 2024 ஒக்டோபர் 9 ஆம் திகதி பொரளை பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட சுமார் ஆறு இலட்சம் (600,000) போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் (01) மற்றும் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டு வாகனத்தை (01) கைது செய்தனர்.

09 Oct 2024

வெடிபொருட்களை பயன்படுத்தி பிடித்ததாக சந்தேகிக்கப்படும் 1084 கிலோகிராம் மீன்களுடன் 02 சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது

திருகோணமலை நிலாவெளி கடற்கரைப் பகுதியில் 2024 ஒக்டோபர் 07 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது வெடிபொருட்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக பிடிபட்டதாக சந்தேகிக்கப்படும் 1084 கிலோகிராம் மீன்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் (02) மற்றும் ஒரு டிங்கி படகு (01) கைப்பற்றப்பட்டது.

08 Oct 2024

2020 வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்திய சந்தேக நபர் ஒருவர் கருவலகஸ்வெவ பிரதேசத்தில் வைத்து கைது

இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இன்று (05 ஒக்டோபர் 2024) புத்தளம் கருவலகஸ்வெவ பிரதேசத்தில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது பஸ்ஸில் கொண்டு செல்லப்பட்ட இரண்டாயிரத்து இருபது (2020) வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர்(01) கைது செய்யப்பட்டுள்ளார்.

05 Oct 2024

1500 வெளிநாட்டு சிகரட்களுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கைது

இலங்கை கடற்படை, இலங்கை பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து 2024 ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி, கொழும்பு ஹெட்டியாவத்தை மற்றும் தலைமன்னார், பேசாலை ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது விற்பனைக்கு தயார் செய்யப்பட்ட 1500 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் 02 சந்தேக நபர்கள் (ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்) கைது செய்யப்பட்டுள்ளனர்.

04 Oct 2024