நடவடிக்கை செய்தி

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படை தொடர்ந்து அனர்த்த நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது

சீரற்ற காலநிலையினால் தீவில் பெய்து வரும் கடும் மழை காரணமாக கலாஓயா, வாரியபொல, கொபேகனை, நச்சிக்குடா மல்லாவில், பொலன்னறுவை கல்லெல்ல, குருநாகல் மஹவ, சிலாபம் அரியகம, திவுலுபிட்டிய, கொடதெனியாவ, கண்டி, ஹல்லொலுவ, தலாது ஓயா மஹமெதகம, கொலன்னாவ மற்றும் கேகாலை குருகல்ல ஆகிய பிரதேசங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக கடற்படையினர் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளை (2025 நவம்பர் 29,) மேற்கொண்டு வருகின்றனர்.

29 Nov 2025

திருகோணமலை மற்றும் அம்பாறை பிரதேசங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படை நிவாரணங்களை வழங்குகிறது

தீவை பாதித்துள்ள பாதகமான வானிலை காரணமாக பெய்து வரும் கனமழையினால், திருகோணமலை, முத்தூர் கிண்ணியா மற்றும் அம்பாறை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ச்சியாக அனர்த்த நிவாரண நடவடிக்கைகளை இன்று (2025 நவம்பர் 28) காலை முதல் கடற்படையினர் மேற்கொண் வருகின்றனர்.

28 Nov 2025

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியை சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் புங்குடுதீவுக்கு கொண்டு செல்ல கடற்படையினரின் உதவி

யாழ்ப்பாணப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக புங்குடுதீவில் சிக்கிக்கொண்ட ஒரு பெண், அடைபட்ட அணுகல் சாலைகள் காரணமாக சிகிச்சை பெற முடியாமல், மாரடைப்பால் பாதிக்கப்பட்டார், இன்று (2025 நவம்பர் 28,) காலை கடற்படையினரால் புங்குடுதீவு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டார்.

28 Nov 2025

சீரற்ற வானிலை காரணமாக மஹவ மற்றும் எலுவன்குளம் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற கடற்படை உதவி

தீவில் பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக, குருநாகலில் உள்ள மஹவ கல்டன் குளத்தின் நீர்மட்டம் பெருக்கெடுத்தல் மற்றும் புத்தளம் எலுவன்குளம் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் பணிகளை கடற்படை அனர்த்த நிவாரணக் குழுக்கள் இன்று (2025 நவம்பர் 28,) காலை மேற்கொண்டன.

28 Nov 2025

சீரற்ற வானிலை காரணமாக ஹங்குரான்கெத்த பகுதியில் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற கடற்படை உதவி

தீவை பாதித்த பாதகமான வானிலையை எதிர்கொண்டு, மண் மேடு சரிந்து விழுந்ததால் கொஸ்கஹலந்த, மாஓயா, உனுவின்ன, ஹங்குரான்கெத்த பகுதியில் சிக்கிய ஒரு குழுவினர் கடற்படை அனர்த்த நிவாரணக் குழுக்களால் நேற்று (2025 நவம்பர் 27,) பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

28 Nov 2025

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படை தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது

தீவை பாதித்துள்ள பாதகமான வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தெற்கு, கிழக்கு, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களை உள்ளடக்கி அனர்த்த நிவாரணக் குழுக்கள் இன்று (2025 நவம்பர் 28,) கடற்படையால் கடமையில் ஈடுத்தப்பட்டுள்ளன, மேலும் இந்த நிவாரணக் குழுக்கள் தொடர்ந்து அனர்த்த நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

28 Nov 2025

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 2250 கிலோ பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றினர்

இலங்கை கடற்படையினர், 2025 நவம்பர் 22 ஆம் திகதி, பமுனுகம, கெபும்கொட மற்றும் வெல்லாவிடிய பகுதிகளில் காவல்துறையினருடன் இணைந்து நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் மூலம், நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சுமார் இரண்டாயிரத்து இருநூற்று ஐம்பது (2250) கிலோகிராம் பீடி இலைகள் மற்றும் நான்கு (04) டிங்கி படகுகளை கடற்படையினர் கைப்பற்றினர்.

27 Nov 2025

புத்தளத்தில் போக்குவரத்துக்காக தயாரிக்கப்பட்ட 699 கிலோகிராம் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றினர்

இலங்கை கடற்படையினர், 2025 நவம்பர் 25 ஆம் திகதி புத்தளம் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டு போக்குவரத்துக்கு தயார் நிலையில் வைத்திருந்த சுமார் அறுநூற்று தொண்ணூற்றொன்பது (699) கிலோகிராம் பீடி இலைகள் மற்றும் ஒரு (01) கெப் வண்டியுடன் இரண்டு (02) சந்தேக நபர்களைக் கடற்படையினர் கைப்பற்றினர்.

26 Nov 2025

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படையினர் தொடர்ந்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்

தென் மாகாணத்தின் காலி மாவட்டத்தின் தவலம மற்றும் நாகொட பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நிறுத்தப்பட்டிருந்த கடற்படை அனர்த்த நிவாரணக் குழுக்கள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பாக மீட்பதற்கும் அவர்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் சிறிய படகுகளைப் பயன்படுத்தி தங்கள் அனர்த்த நிவாரணப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.

26 Nov 2025

புத்தளத்தில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பூச்சிக்கொல்லியை கடற்படையினர் கைப்பற்றினர்

இலங்கை கடற்படையினர், 2025 நவம்பர் 20 ஆம் திகதி புத்தளம், காரைதீவு கடற்பரப்பில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பூச்சிக்கொல்லிகளுடன் கூடிய ஒரு டிங்கி (01) படகையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

25 Nov 2025