இன்டர்-கிளப் ரக்பி லீக் போட்டித்தொடரில் கடற்படைக்கு மற்றுமொரு வெற்றி

இன்டர்-கிளப் ரக்பி லீக் போட்டித்தொடர் - 2022, முதல் கட்டத்தின் 2022 பெப்ரவரி 11 ஆம் திகதி இலங்கை கடற்படை விளையாட்டுக் கழகம் மற்றும் CR & FC விளையாட்டுக் கழகம் இடையில் வெலிசர கடற்படை மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் 18-13 என்ற வித்தியாசத்தில் இலங்கை கடற்படை விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றது.

இங்கு கடற்படை வீரர் ஏ.ஈ.வீரதுங்க மற்றும் கடற்படை வீரர் டி.எம்.ஏ.குணசிங்க ஆகியோர் முயற்சி வெற்றிகள் இரண்டும் (02), கடற்படை வீரர் ஜி.ஆர்.எம்.சி.பி செனவிரத்ன மற்றும் கடற்படை வீரர் ஏ.எம்.சமுவேல் ஆகியோர் இரண்டு பெனால்டிகளையும், ஆர்.ஜே சந்திமால் ஒரு கோலும் பெற்றதுடன் 18-13 என்ற வித்தியாசத்தில் இலங்கை கடற்படை விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியைப் பார்வையிட தெற்கு கடற்படை கட்டளைத் தளபதியும் கடற்படை ரக்பி அணியின் தலைவருமான ரியர் அட்மிரல் சஜித் கமகே உட்பட கடற்படையின் சிரேஷ்ட அதிகாரிகள், கடற்படையினர் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.