இலங்கை புதியவர்கள் குத்துச்சண்டை போட்டித்தொடரில் கடற்படை பல வெற்றிகள் பெற்றது

இலங்கை குத்துச்சண்டை சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட புதியவர்கள் குத்துச்சண்டை போட்டித்தொடர் - 2022 இல் இலங்கை கடற்படை குத்துச்சண்டை அணி 04 தங்கம் மற்றும் 04 வெள்ளிப் பதக்கங்கள் உட்பட பல விருதுகளை வென்றுள்ளது.

கொழும்பு றோயல் கல்லூரி உள்ளக விளையாட்டரங்கில் உள்ள குத்துச்சண்டை வளையத்தில் 2022 ஜூன் 20 முதல் 24 வரை நடைபெற்ற இப்போட்டியில் இலங்கை கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்தும் 15 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

அங்கு கிலோ கிராம் 57, 60, 71 மற்றும் 80 கிலோ எடைப் பிரிவுகளை பிரிதிப்படுத்தி போட்டித்தொடரில் கழந்துகொண்ட கடற்படை வீர்ர் ஈ.டப்.ஏ சந்தருவன், கடற்படை வீர்ர் எம்.ஜி.பி.கே.பி தயாரத்ன, கடற்படை வீர்ர் எஸ்எச்டியு குமார மற்றும் கடற்படை வீர்ர் பிஎஸ்பி தேசப்பிரிய ஆகியோர் முறையே தங்கப் பதக்கங்களை வென்றனர். கடற்படை வீர்ர் பி.ஒ.ஒ.கே.ஐ.சீ பிரபாத், கடற்படை வீர்ர் டபிள்யூ.டி.கே.ஜெயசிங்க மற்றும் கடற்படை வீர்ர் ஏ.டப்.ஏ.மதுஷான் ஆகியோர் முறையே 48, 75 மற்றும் 86 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.

இதேவேளை, 63.5 கிலோவுக்கு கீழ் எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும், போட்டியின் சிறந்த தோல்வியாளருக்கான கோப்பையையும் கடற்படை வீர்ர் எஸ்.எம்.சி.எஸ் சமரக்கோன் வென்றதுடன் புதியவர்கள் குத்துச்சண்டை 2022 போட்டித்தொடர் முழுவதிலும் உயர் தரமான திறனை வெளிப்படுத்திய இலங்கை கடற்படை அணி பெரும் கௌரவத்தை பெற்றுள்ளது.