கட்டளைகளுக்குக் இடையேயான பாய்மரப் படகோட்டம் போட்டித்தொடர் - 2022 திருகோணமலையில் வெற்றிகரமாக நிறைவு பெற்றது

கடற்படை கட்டளைகளுக்குக் இடையேயான பாய்மரப் படகோட்டம் போட்டித்தொடர் 2022 ஒக்டோபர் 04 ஆம் திகதி முதல் 07 ஆம் திகதி வரை திருகோணமலை உள் துறைமுகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றதுடன் இதில் ஆண்களுக்கான சாம்பியன்ஷிப்பை ஏவுகணை கட்டளை மற்றும் பெண்களுக்கான சாம்பியன்ஷிப்பை பயிற்சிக் கட்டளை வென்றது.

திருகோணமலை உள் துறைமுகத்தில் 04 நாட்களாக இந்த வருடத்திற்கான கட்டளைகளுக்கு இடையிலான பாய்மரப்போட்டித்தொடர் எண்டர்பிரைசஸ் பிரிவின் (Enterprises category) கீழ் இடம்பெற்றதுடன், முதன்முறையாக இண்டர்பிரைசஸ் பாய்மரப்போட்டிக்கு லேசர் பிரிவு (Laser category) அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, எண்டர்பிரைஸ் பிரிவுக்காக 17 பாய்மரப் படகுகளும், லேசர் பிரிவுக்கு 06 பாய்மரப் படகுகளும் கொண்ட அனைத்து கடற்படைக் கட்டளைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தப் போட்டித்தொடரில் 45 விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர்.

படகோட்டம் நிகழ்வின் எண்டர்பிரைஸ் பிரிவின் கீழ் ஆண்களுக்கான சாம்பியன்ஷிப்பை ஏவுகணை கட்டளை வென்றதுடன் இரண்டாம் இடத்தை கிழக்கு கடற்படை கட்டளை வென்றது. எண்டர்பிரைஸ் பிரிவின் கீழ் பெண்கள் சாம்பியன்ஷிப்பை பயிற்சி கட்டளை வென்றதுடன் இரண்டாம் இடத்தை கிழக்கு கடற்படை கட்டளை வென்றது.

மேலும், கட்டளைகளுக்கு இடையிலான பாய்மரப்போட்டித் தொடரில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட லேசர் பிரிவுக்காக பயிற்சி கட்டளை, ஏவுதல் கட்டளை, மேற்கு கட்டளை மற்றும் தெற்கு கட்டளை ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் 06 பாய்மரப் பட்குகள் இணைந்ததுடன், அதன் வெற்றியை ஏவுதல் கட்டளையை பிரதிநிதித்துவப்படுத்திய லெப்டினன்ட் கே.கே.பி.என். கன்னங்கர பெற்றுள்ளார்.

இந்த போட்டித்தொடரின் பரிசளிப்பு விழா கிழக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்னவின் தலைமையில் திருகோணமலை கடற்படை முகாமில் உள்ள கொமான்டர் சாந்தி பஹார் நினைவு படகு முற்றத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கிழக்கு கடற்படை கட்டளையின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.