12வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுப் போட்டித்தொடரில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கயிறு இழுத்தல் போட்டியில் இரண்டாம் இடத்தை கடற்படை வென்றது

12வது பாதுகாப்பு சேவைகள் கயிறு இழுத்தல் போட்டித்தொடர் 2022 ஒக்டோபர் 26 மற்றும் 28 ஆம் திகதிகளில் கட்டுநாயக்க இலங்கை விமானப்படை மைதானத்தில் நடைபெற்றதுடன் இங்கு இலங்கை கடற்படை ஆண்கள் மற்றும் பெண்கள் கயிறு இழுத்தல் அணிகள் இராணுவ அணிகளுக்கு எதிரான இறுதிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றன.

பன்னிரண்டாவது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுப் போட்டித்தொடர் 2022 ஒக்டோபர் 19 ஆம் திகதி பனாகொட இராணுவ முகாமின் புதிய உள்ளக விளையாட்டரங்கில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பாதுகாப்புப் படைகளின் பிரதானி மற்றும் முப்படைத் தளபதிகளின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி இப் போட்டித்தொடரின் கயிறு இழுத்தல் போட்டிகள் ஒக்டோபர் 26 மற்றும் 28 ஆம் திகதிகளில் கட்டுநாயக்க இலங்கை விமானப்படை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

அங்கு ஒக்டோபர் 26ஆம் திகதி நடைபெற்ற கயிறு இழுத்தல் போட்டிகளில் சிறப்பாகச் செயற்பட்ட கடற்படை ஆண்கள் மற்றும் பெண்கள் கயிறு இழுத்தல் அணிகள், விமானப்படையின் ஆண்கள் மற்றும் பெண்கள் கயிறு இழுத்தல் அணிகளை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. இதன்படி ஒக்டோபர் 28ஆம் திகதி இராணுவ ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கடற்படையின் ஆண்கள் மற்றும் பெண்கள் கயிறு இழுத்தல் அணிகள் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் முப்படையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட மற்றும் இளநிலை அதிகாரிகள் மற்றும் பல நபர்கள் கலந்துகொண்டனர்.