பாதுகாப்பு சேவை கைப்பந்து ஆண்கள் சாம்பியன்ஷிப்பை இலங்கை கடற்படை வெற்றி பெற்றது

பன்னிரண்டாவது (12) பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுப் போட்டித்தொடரில் - 2022/23, பாதுகாப்பு சேவை கைப்பந்து போட்டிகள் 2022 நவம்பர் 09, 10 மற்றும் 11 ஆகிய திகதிகளில் மினுவாங்கொடை ‘Airport Sports Complex’ யில் நடைபெற்றதுடன் அங்கு கடற்படை ஆண்கள் கைப்பந்து அணி பாதுகாப்பு சேவை கைப்பந்து சாம்பியன்ஷிப்பை வெற்றி பெற்றது.

இலங்கை கடற்படையினரால் நடத்தப்பட்ட இந்த போட்டித்தொடரில் கடற்படை ஆண் கைப்பந்தாட்ட அணி இலங்கை விமானப்படை அணியை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அதன்படி இறுதிப் போட்டியில் கடற்படை வீரர்கள் அபாரமாக விளையாடி இராணுவ அணியை 35 - 28 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து பன்னிரண்டாவது (12) பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுப் போட்டித்தொடரில் - 2022/23 வெற்றி பெற்றது. பன்னிரண்டாவது (12) பாதுகாப்பு சேவைகள் போட்டித்தொடரில் இலங்கை கடற்படை வென்ற முதல் தங்கப் பதக்கமாகவும் இது அமைந்தது.

இறுதிப் போட்டியில் பிரதம அதிதியாக கடற்படை விளையாட்டுப் பணிப்பாளர் கொமடோர் ரொஷான் அத்துகோரல கலந்து கொண்டதுடன், போட்டித்தொடரில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், சிறப்பான திறமைகளை வெளிப்படுத்திய வீரர்களுக்கும் பிரதம அதிதியால் பதக்கங்கள் மற்றும் வெற்றிக்கிண்ணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இதன்படி, சிறந்த தாக்குதல் வீரருக்கான கோப்பையை கடற்படை வீரர் பிரசாத் டி சில்வாவும், சிறந்த வலை காப்பாளருக்கான கோப்பையை கடற்படை வீரர் சஞ்சீவ டி சில்வாவும், சிறந்த விளையாட்டு வீரருக்கான கோப்பையை கடற்படை வீர்ர் பிரதீப் விஜேந்திரவும் பெற்றுக்கொண்டனர்.

மேலும், இந்நிகழ்வில் முப்படையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட மற்றும் இளநிலை அதிகாரிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் குழுவும் கலந்துகொண்டனர்.