“Dr Nihal Jinasena Memorial Cup annual Sailing Regatta - 2022” பாய்மரப் படகுப் போட்டித்தொடரில் கடற்படை விளையாட்டு வீரர்களுக்கு பல வெற்றிகள்

“Dr Nihal Jinasena Memorial Cup annual Sailing Regatta - 2022” பாய்மரப் படகுப் போட்டித்தொடர் 2022 டிசம்பர் 03 ஆம் திகதி வெலிகம, மிரிஸ்ஸ கப்பரதொட கடற்கரையில் வெற்றிகரமாக நடைபெற்றதுடன் இதில் கடற்படை பாய்மரக் குழு பல வெற்றிகளைப் பெற்றுள்ளது.

ருஹுனு பாய்மரப் படகுச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போட்டித்தொடருக்காக கடற்படை பாய்மரப் படகுகள் பிரிவு உட்பட தீவின் பல பாய்மரப் படகுகள் சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி 87 விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர்.

இதன்படி, இப் போட்டித்தொடரில் ‘Lasar Radial Class’ பிரிவில் முதலாம் இடம் கடற்படை வீரர் பீ.டி.டி.எஸ் ராஜபக்ஷ பெற்றுள்ளதுடன் கடற்படை வீரர் டப்.ஏ.எஸ்.வீரதுங்க மற்றும் கடற்படை வீரர் ஜே.எஸ்.செனவிரத்ன அந்த பிரிவில் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றுள்ளனர்.

‘Lasar Standard Class’ பிரிவில் இரண்டாம் இடம் கடற்படை வீர்ர் கே.ஜி.சி.யு.எஸ்.பண்டார பெற்றுள்ளதுடன் கே.வி.என் திமால் அதன் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார். மேலும், ‘GP14 Class’ பிரிவில் கடற்படை வீர்ர் என்.ஜி.எம்.யு.குணவர்தன மற்றும் கடற்படை வீர்ர் ஏ.எஸ்.கே.சொய்சா ஆகியோர் இரண்டாம் இடங்களையும், கடற்படை வீரர் ஜே.எம்.பி.எல்.ஜெயசூரிய மற்றும் கடற்படை வீர்ர் கே.சீ த சொய்சா ஆகியோர் மூன்றாம் இடங்களை பெற்றுள்ளனர்.

மேலும், ‘Enterprise Class’ பிரிவில், முதலாம் இடம் கடற்படை வீரர் ஏஎம்ஐபி அத்தநாயக்க மற்றும் கடற்படை வீரர் கேஎஸ்கே த சில்வா ஆகியோர் பெற்றுள்ளதுடன் கடற்படை வீர்ர் ஜேஎச்எம்பிஐ ஜெயபத்ம மற்றும் கடற்படை வீர்ர் எஸ்பிபிஎன் குமார ஆகியோர் இதன் இரண்டாம் இடத்தையும் கடற்படை வீர்ர் ஜேஎச்டிசி அப்புஹாமி மற்றும் கடற்படை வீர்ர் கே.ஏ.என்.கித்சிறி மூன்றாம் இடத்தையும் பெற்றனர். மேலும், இந்தப் போட்டித் தொடரின் ‘Wind Surfing’ பிரிவில் முதலிடத்தை கடற்படை வீர்ர் கே.பி.பி.குணவர்தன பெற்றார்.

மேலும், கடற்படை விளையாட்டுச் சபையின் தலைவரான தற்போதைய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் கடற்படை விளையாட்டுத் துறையின் உள்கட்டமைப்புகளை விரிவுபடுத்துதல் மற்றும் கடற்படை விளையாட்டு வீரர்களின் நலன்புரி வசதிகளை மேம்படுத்துதல். கடற்படை விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பைக் கொண்டு வந்துள்ளது.