2023 – நிப்போன் பத்து உறுப்பினர்கள் கொண்ட மகளிர் ரக்பி போட்டித்தொடரில் CR&FCக்கு எதிரான போட்டியில் கடற்படை மகளிர் அணி வெற்றி பெற்றது

2023 ஜனவரி 22 ஆம் திகதி கொழும்பு லொங்டன் பிளேஸில் நடைபெற்ற 2023 – நிப்போன் பத்து உறுப்பினர்கள் கொண்ட மகளிர் ரக்பி போட்டித்தொடரில் CR&FC மகளிர் ரக்பி அணிக்கு எதிரான போட்டியில் கடற்படை மகளிர் ரக்பி அணி 30-05 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

அதன்படி, இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய கடற்படை வீராங்கனை ஆர்.எஸ்.எச்.குமாரி 03 முயற்சி வெற்றிகளும், கடற்படை வீராங்கனை பீ.டிலானி, கடற்படை வீராங்கனை ஏ.எச்.எஸ்.மதுமாலி மற்றும் கடற்படை வீராங்கனை என்.ஜே.கே.தில்ருக்ஷி ஆகியோர் 01 முயற்சி வெற்றிகளும் பெற்றனர்.

மேலும், இந்நிகழ்வுக்காக கடற்படை ரக்பி அணியின் தலைவர் கொமடோர் சனத் பிடிகல, கடற்படை ரக்பி அணியின் செயலாளர் கேப்டன் தம்மிக்க அபேசுந்தர உட்பட அதிகாரிகள் மற்றும் கடற்படையினர் கலந்துகொண்டனர்.