“NIPPON PAINT KABADDI CHAMPIONSHIP – 2023” மகளிர் கபடி சாம்பியன்ஷிப்பை கடற்படை வென்றது

2023 ஏப்ரல் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் பிலியந்தலை சோமவீர ஹரிஸ்சந்திர விளையாட்டரங்கில் நடைபெற்ற NIPPON PAINT KABADDI CHAMPIONSHIP – 2023 Super League போட்டித்தொடர் வெற்றிகரமாக நிறைவடைந்த்துடன் கடற்படை மகளிர் கபடி அணி அதன் மகளிர் சாம்பியன்ஷிப்பை வென்றது.

அதன்படி, நிப்பான் பெயிண்ட் நிருவனம் நடத்திய NIPPON PAINT KABADDI CHAMPIONSHIP – 2023 சுற்றுப்போட்டித்தொடரில் இலங்கை விமானப்படை மகளிர் கபடி அணிக்கு இடையிலான போட்டியில் 32 - 22 புள்ளிகள் எனவும், இலங்கை இராணுவ மகளிர் கபடி அணிக்கு இடையிலான போட்டியில் 59 – 17 எனவும் இலங்கை கடற்படை மகளிர் கபடி அணி வெற்றிப்பெற்று ஒட்டுமொத்த மகளிர் சாம்பியன் பட்டத்தை வென்றது.