‘கட்டளைகளுக்கு இடையேயான டெனிஸ் போட்டித்தொடர் – 2024’ யின் கோப்பையை வடக்கு கடற்படை கட்டளை வென்றது

கடற்படை மற்றும் கடல்சார் அகடமி டெனிஸ் மைதானத்தில் 2024 ஜூன் 22 முதல் 29 வரை இடம்பெற்ற ‘கட்டளைகளுக்கு இடையேயான டெனிஸ் போட்டித்தொடர் – 2024’ யின் கோப்பையை வடக்கு கடற்படை கட்டளை வென்றதுடன், இப் போட்டித் தொடரில் இரண்டாம் இடத்தை வட மத்திய கடற்படை கட்டளை வென்றது.

கடற்படை கட்டளைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்கள் பலர் கலந்துகொண்ட இப் போட்டித்தொடரில், புதியவர்களுக்கான சம்பியன்ஷிப்பை கடற்படை வீரர் எச்.எல்.என்.எம்.குசும்சிறியும் இரண்டாம் இடத்தை லெப்டினன்ட் கமாண்டர் நிஹால் ரத்நாயக்கவும் வென்றனர்.

மேலும் மூத்த இரட்டையர் பிரிவில் கொமடோர் மர்லன் பெரேரா மற்றும் கப்டன் எம்.ஏ.டி.டி.எம்.பியதிலக ஆகியோர் சம்பியன் பட்டத்தை வென்றதுடன், ரியர் அட்மிரல் சந்திம சில்வா மற்றும் கப்டன் ரஞ்சித் வல்கம்பாய ஆகியோர் இரண்டாம் இடத்தைப் பெற்றனர். திறந்த இரட்டையர் கோப்பைய கடற்படை வீரர், என்.ஜே.ஆர் ஹேமகுமார மற்றும் கடற்படை வீரர் பி.எம்.எஸ்.எல் பெரேரா ஆகியோர் வென்றதுடன், இரண்டாம் இடத்தை கமாண்டர் துமிந்த தயானந்த மற்றும் லெப்டினன்ட் கமாண்டர் கே.எச்.எம்.டபிள்யூ.எல்.பி அபேசிங்க ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

மேலும் ‘கட்டளைகளுக்கு இடையேயான டெனிஸ் போட்டித்தொடர் – 2024’ யின் பரிசளிப்பு விழா கிழக்கு கடற்படை கட்டளையின் பிரதித் தளபதி ரியர் அட்மிரல் ஜகத் குமார தலைமையில் இடம்பெற்றதுடன், இந் நிகழ்வில் கிழக்கு கடற்படை கட்டளையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் குழுவினர்களும் கலந்துகொண்டனர்.