விளையாட்டு செய்திகள்
‘Commandant’s Cup Sailing Regatta - 2024’ திருகோணமலையில் வெற்றிகரமாக முடிவடைந்தது
திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரியின் ஏற்பாட்டில் நான்காவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட ‘Commandant’s Cup Sailing Regatta - 2024’ படகோட்டப் போட்டித்தொடர், 2024 ஆகஸ்ட் 18 ஆம் திகதி முதல் நான்கு (04) நாட்கள் திருகோணமலை, Sandy Bay கடற்கரையில் வெற்றிகரமாக நடைபெற்றதுடன், போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் கோப்பைகள் வழங்கல் இன்று (2024 ஆகஸ்ட் 21) கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் தளபதி கொமடோர் ரொஹான் ஜோசப்பின் அழைப்பின் பேரில், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் தலைமையில், திருகோணமலை கடற்படை கப்பல்துறை Sandy Bay கடற்கரையில் நடைப்பெற்றது.
21 Aug 2024
நீர்கொழும்பு சர்வதேச தரவரிசை செஸ் சாம்பியன்ஷிப் 2024ல் இரண்டாம் இடத்தை கடற்படை வென்றது
இலங்கை செஸ் சம்மேளனத்துடன் இணைந்து கம்பஹா மாவட்ட செஸ் சங்கம் ஏற்பாடு செய்த எட்டாவது (08) நீர்கொழும்பு சர்வதேச தரவரிசை செஸ் சாம்பியன்ஷிப் போட்டித்தொடர், 2024 ஆகஸ்ட் 15 முதல் 19 வரை கம்பஹா, ஜா எல, வெட் வாட்டர் ரிசார்ட்டில் நடைபெற்றதுடன், அங்கு இரண்டாவது இடத்தை கடற்படை வென்றது.
21 Aug 2024


