‘Eagles Cup Handball Challenge Trophy 2024’ போட்டித்தொடரில் ஆண்களுக்கான இரண்டாம் இடத்தை கடற்படை வென்றது
இலங்கை விமானப்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘Eagles Cup Handball Challenge Trophy 2024’, கைப்பந்தாட்டப் போட்டித்தொடர், 2024 நவம்பர் 17 முதல் 20 வரை கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றதுடன், இதில் கடற்படை ஆண்கள் அணி இரண்டாம் இடத்தை வென்றது.
ஆண்களுக்கான 09 கைப்பந்தாட்ட அணிகள் பங்குபற்றிய இப் போட்டித்தொடரில் ஆண்களுக்கான இறுதிப் போட்டிக்கு இராணுவ அணியும் கடற்படை அணியும் தெரிவாகியதுடன், 41 - 40 கோல்களுடன் கடும் போட்டியின் பின்னர் கடற்படை அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.
மேலும், இப் போட்டியில் சிறந்த வீரருக்கான கோப்பையை கடற்படை கைப்பந்தாட்ட அணியின் தலைவரான டி.ஏ.சி.பி. விஜேந்ர பெற்றுக்கொண்டது.