கடற்படை கட்டளைகளுக்கு இடையிலான துப்பாக்கி சுடும் போட்டித்தொடரில் சாம்பியன்ஷிப்பை பயிற்சி கட்டளை வென்றது
இலங்கை கடற்படை பயிற்சி நிறுவனத்தின் துப்பாக்கி சுடும் தளத்தில் 2025 ஏப்ரல் 05 முதல் 08 வரை கடற்படை கட்டளைகளுக்கு இடையிலான துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றதுடன், பயிற்சி கட்டளையின் ஆண்கள் மற்றும் பெண்கள் சாம்பியன்ஷிப்பை வென்றனர்.
அதன்படி, கடற்படையின் அனைத்து கட்டளைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 220 விளையாட்டு வீரர்கள் கடற்படை கட்டளைகளுக்கு இடையிலான துப்பாக்கிச் சூடும் போட்டித்தொடரில் பங்கேற்றனர்.
ஒட்டுமொத்தப் போட்டித்தொடரில் சிறந்த ஆண் துப்பாக்கிச் சுடும் வீரருக்கான கோப்பையை கிழக்கு கடற்படை கட்டளையைச் சேர்ந்த கடற்படை வீரர் ஜே.பி.ஏ சஞ்சீவ மற்றும் சிறந்த வீராங்கனைக்கான கோப்பையை பயிற்சி கட்டளையைச் சேர்ந்த கடற்படை பெண் மாலுமியான பி..டிஎம்.ஏ.ஆர் குமாரசிறி வென்றதுடன், இந்தப் போட்டித்தொடரில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை பயிற்சிக் குழு வென்றது.