13வது பாதுகாப்பு சேவைகள் வூஷு சாம்பியன்ஷிப்பை கடற்படை வென்றது

13வது பாதுகாப்பு சேவைகள் வூஷு போட்டித் தொடர் 2025 ஜூன் 2 முதல் 4 ஆம் திகதி வரை அம்பேபுஸ்ஸவில் உள்ள இலங்கை சிங்கப் படைப்பிரிவு உட்புற மைதானத்தில் வெற்றிகரமாக நடைபெற்றதுடன், இதில் கடற்படையின் ஆண்கள் மற்றும் பெண்கள் இரண்டாம் இடத்தைப் வென்றனர்.

சண்டா (Sanda) மற்றும் (Taolu) ஆகிய பல்வேறு பிரிவுகளில் போட்டியிட்ட கடற்படை விளையாட்டு வீரர்கள் போட்டித் தொடர் முழுவதும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி 23 பதக்கங்களை வென்றனர்.

அதன்படி, கடற்படை ஆண்கள் அணி 06 பதக்கங்கள், 02 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 07 வெண்கலப் பதக்கங்களை வென்ற அதே நேரத்தில் பெண்கள் அணி 04 தங்கப் பதக்கங்கள், 02 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 02 வெண்கலப் பதக்கங்களை வென்று 23 பதக்கங்களை வென்றதுடன், இதன் மூலம் 13 வது பாதுகாப்பு சேவைகள் வூஷு சாம்பியன்ஷிப்பில் கடற்படை இரண்டாம் இடத்தைப் பிடித்தது.