‘MAHAMERUWA RALLY CROSS – 2025’ பந்தயப் போட்டியில் மோட்டார் சைக்கிள் பிரிவில் கடற்படை வெற்றி பெற்றது

இலங்கை மோட்டார் வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘MAHAMERUWA RALLY CROSS – 2025’ பந்தயப் போட்டி 2025 ஜூன் 29 அன்று கிரியுல்ல மகாமேருவ பாதையில் நடைபெற்றது, இதில் கடற்படை Standard 250CC மோட்டார் சைக்கிள் பிரிவில் மூன்றாம் இடத்தைப் பிடித்தது.

இந்தப் போட்டியில் இலங்கையின் சூப்பர் ரேசிங் மோட்டார் சைக்கிள் அணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல வீரர்கள் பங்கேற்றதுடன், மேலும் கடற்படையின் சூப்பர் ரேசிங் மோட்டார் சைக்கிள் அணியைச் சேர்ந்த ஆறு (06) வீரர்கள் பதினொரு (11) மோட்டார் சைக்கிள் போட்டிகளின் கீழ் நடைபெற்ற போட்டியின் Racing 125 CC, Standard 125CC, Standard 250CC, Super Mortard Race - 01 மற்றும் Super Mortard Race - 02 பிரிவுகளில் பங்கேற்றனர்.

அதன்படி, கடற்படை,யின் உடல் பயிற்சியாளர் இஏபிஎன் எதிரிசிங்கவினால், Standard 250CC பிரிவில் மூன்றாவது (03) இடத்தைப் பெற முடிந்தது.