“PCC & Handgun Nationals 2025” தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டித்தொடர் வெலிசரவில் வெற்றிகரமாக நிறைவடைந்தது

இலங்கையின் சர்வதேச நடைமுறை துப்பாக்கிச் சூடு கூட்டமைப்பு (International Practical Shooting Confederation - IPSC) ஏற்பாடு செய்த Pistol Caliber Carbine (PCC) மற்றும் Handgun Level III தேசிய துப்பாக்கிச் சூடு போட்டி, 2025 ஜூன் 18 முதல் 22 வரை வெலிசர கடற்படை கைத்துப்பாக்கிச் சூட்டு மைதானத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. விருது வழங்கும் விழா 2025 ஜூன் 22 ஆம் திகதி Wave n’ Lake கடற்படை உற்சவ மண்டபத்தில் கௌரவ பாதுகாப்பு துணை அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்த தேசிய துப்பாக்கிச் சூடு போட்டியில் இராணுவம், காவல்துறை மற்றும் சிவிலியன் துப்பாக்கிச் சூட்டு பதினாறு (16) கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இருநூற்று எழுபது (270) க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர், மேலும் போட்டியை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு ரேஞ்ச் அதிகாரிகள் (Range Officers) மதிப்பிட்டனர்.

அங்கு அணிப் போட்டிகளில் வெற்றிகளைப் பெற்ற கடற்படை,, திறந்த பெண்கள் பிரிவில் நான்கு (04) தங்கப் பதக்கங்களையும், திறந்த ஆண்கள் பிரிவில் நான்கு (04) வெள்ளிப் பதக்கங்களையும், ஆண்கள் பிரிவில் நான்கு (04) வெள்ளிப் பதக்கங்களையும், தயாரிக்கப்பட்ட ஆண்கள் பிரிவில் நான்கு (04) வெண்கலப் பதக்கங்களையும், PCC Iron ஆண்கள் பிரிவில் நான்கு (04) தங்கப் பதக்கங்களையும் வென்றனர்.

போட்டியின் தனிப்பட்ட போட்டிகளில் சிறப்பான திறனை வெளிப்படுத்தி; யு.எஸ். ரோட்ரிகோ PCC Iron Overall பெண்கள் பிரிவுடன் தலைமை தங்கப் பதக்கத்தையும் வென்றார்,கெபிஜிபிடி தனுஷ்க PCC Iron Overall ஆண்கள் பிரிவுடன் தலைமை தங்கப் பதக்கத்தை வென்றார், அதே பிரிவில் டப்ஏகெடிசி பெரேரா வெண்கலப் பதக்கத்தை வென்றார், Classic Division Overall பிரிவில் கமாண்டர் எச்ஏடி பொன்சேகா வெள்ளிப் பதக்கத்தை வென்றார், அதே பிரிவில் பெண் மாலுமி டப்டிசிஎம் தர்மதாச வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

இதேபோல், ஓபன் டிவிஷன் லேடி ஓவரில் (Open Division Lady Overall) தங்கப் பதக்கத்கம், ப்லீட் சீப் பெட்டி ஆபீசர் யு.எஸ். ரோட்ரிகோ, அந்தப் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை பெண் மாலுமி சி.என்.ஜெயசிங்க, (Open Division) தங்கப் பதக்கம் ப்லீட் சீப் பெட்டி ஆபீசர் யு.எஸ். ரோட்ரிகோ, அந்தப் பிரிவில் வெண்கலப் பதக்கம் லீடிங் சீமன் டபிள்யூ.ஏ.டி. சதுரங்க, முன்னணி வானொலி தொழில்நுட்ப வல்லுநர் கேபிஜிடி தனுஷ்க தங்கப் பதக்கத்தையும் ஆகியோர் வென்றனர். அத்துடன் ஒட்டுமொத்தப் போட்டியில் கடற்படை துப்பாக்கிச் சூடு அணி முப்பத்தாறு (36) பதக்கங்களை வென்றது,

மேலும், போட்டியின் வெற்றியாளர்களுக்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் கௌரவ ரியர் அட்மிரல் மஞ்சுள திசாநாயக்க, முப்படைகள் மற்றும் காவல்துறையின் மூத்த அதிகாரிகள் பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வழங்கினர்.