‘கட்டளைகளுக்கு இடையேயான கால்பந்து போட்டித் தொடரில் - 2025’ சாம்பியன்ஷிப்பை மேற்கு கடற்படை கட்டளை வென்றது

இலங்கை கடற்படைக் கட்டளைகளுக்கு இடையேயான கால்பந்து போட்டித் தொடர் - 2025 இல் வெலிசர கடற்படை வளாக கால்பந்து மைதானத்தில் 2025 ஜூலை 4 முதல் 11 வரை நடைபெற்றதுடன், மேற்கு கடற்படை கட்டளை ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை வென்றது.

அதன்படி, அனைத்து கடற்படை கட்டளைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பல வீரர்கள் பங்கேற்ற இந்தப் போட்டியின் இறுதிப் போட்டி தொடர், 2025 ஜூலை 11 ஆம் திகதி மேற்கு கடற்படை கட்டளைக்கும் பயிற்சி கட்டளை அணிக்கும் இடையே நடைபெற்றதுடன், இந்தப் போட்டியில் மேற்கு கடற்படை கட்டளை அணி 2-1 கோல்கள் என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது, பயிற்சி கட்டளை அணி இரண்டாம் இடத்தையும் கிழக்கு கடற்படை கட்டளை அணி மூன்றாம் இடத்தையும் வென்றது.

மேலும், ‘கட்டளைகளுக்கு இடையேயான கால்பந்து போட்டியில் சிறந்த வளர்ந்து வரும் வீரருக்கான கோப்பையை பயிற்சி கட்டளை அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கெடட் அதிகாரி ஆர்.எம்.ஐ.கே.பி. ஏகநாயக்கவும், சிறந்த கோல்கீப்பருக்கான கோப்பையை மேற்கு கடற்படை கட்டளையைச் சேர்ந்த லெப்டினன்ட் ஐ.கே.டி.பி. காவிந்தவும், சிறந்த வீரருக்கான கோப்பையை மேற்கு கடற்படை கட்டளையைச் சேர்ந்த லெப்டினன்ட் எஸ்.ஐ. வீரசிங்கவும் வென்றனர்.