கடற்படை கட்டளைகளுக்கு இடையிலான ரக்பி போட்டியானது வெற்றிகரமாக நிறைவடைந்தது
கடற்படை கட்டளைகளுக்கு இடையிலான ரக்பி போட்டி - 2025, இம்முறை மேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் கெமுனு ரக்பி மைதானத்தில் 2025 ஜூலை 23 முதல் 25 வரை வெற்றிகரமாக நடைபெற்றதுடன், இதில் கிழக்கு கடற்படை கட்டளை ஆண்கள் சாம்பியன்ஷிப்பையும், பயிற்சி கட்டளை பெண்கள் சாம்பியன்ஷிப்பையும் வென்றது.
அதன்படி, போட்டியின் ஆண்களுக்கான இறுதிப் போட்டி பயிற்சி கட்டளைக்கும் கிழக்கு கடற்படை கட்டளைக்கும் இடையில் நடைபெற்றது. அங்கு சிறப்பாக விளையாடிய கிழக்கு கடற்படை கட்டளை அணி, பயிற்சி கட்டளை அணியை 07/05 புள்ளிகள் வித்தியாசத்தில் தோற்கடித்து இந்த முறை கட்டளைகளுக்கு இடையிலான ஆண்கள் ரக்பி சாம்பியன்ஷிப்பை வென்றதுடன் பயிற்சி கட்டளை இரண்டாவது இடத்தையும் மேற்கு கடற்படை கட்டளை மூன்றாவது இடத்தையும் பிடித்தது.
பயிற்சி கட்டளை அணிக்கும் வடக்கு கடற்படை கட்டளை அணிக்கும் இடையிலான மகளிர் இறுதிப் போட்டியில் 10/05 என்ற கணக்கில் வெற்றி பெற்று, பயிற்சி கட்டளை அணி மகளிர் ரக்பி சாம்பியன்ஷிப்பை வென்றதுடன் வடக்கு கடற்படை கட்டளை அணி இரண்டாவது இடத்தையும், வட மத்திய கடற்படை கட்டளை அணி மூன்றாவது இடத்தையும் பிடித்தன.
2025 ஆம் ஆண்டுக்கான கட்டளைகளுக்கு இடையிலான ரக்பி போட்டியின் கேடய சாம்பியன்ஷிப்பை வட மத்திய கடற்படை கட்டளை வென்றதுடன் அதே நேரத்தில் வடமேற்கு கடற்படை கட்டளை கிண்ண சாம்பியன்ஷிப்பை வென்றது.
இதேபோல், போட்டியின் சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை கிழக்கு கடற்படை கட்டளையைச் சேர்ந்த லெப்டினன்ட் கேவிடிஎன் தர்மதாசவும், சிறந்த மகளிர் விளையாட்டு வீராங்கனைக்கான விருதை வடக்கு கடற்படை கட்டளையைச் சேர்ந்த பெண் மாலுமி எச்கேபி கருணாதிலகாவும் வென்றனர்.
மேலும், கடற்படையின் துணை பிரதி பிரதானியும், மேற்கு கடற்படை கட்டளை மற்றும் தன்னார்வ கடற்படைத் தளபதியுமான ரியர் அட்மிரல் சந்திம சில்வா ஆகியோர் 2025 ஆம் ஆண்டுக்கான கட்டளைகளுக்கு இடையிலான ரக்பி போட்டியின் இறுதி நாளில் பிரதம விருந்தினராகப் பங்கேற்றனர். மேலும், இயக்குநர் ஜெனரல் செயல்பாடுகள், இயக்குநர் விளையாட்டு, சிரேஷ்ட, கனிஷ்ட அதிகாரிகள் மற்றும் மாலுமிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.