கட்டளைகளுக்கிடையிலான மேசைப் பந்து போட்டி - 2025 வெற்றிகரமாக நிறைவடைந்தது
2025 ஆம் ஆண்டுக்கான கட்டளைகளுக்கிடையிலான மேசைப் பந்து போட்டி, இலங்கை கடற்படைக் கப்பல் கெமுனுவின் கமாண்டர் பராக்கிரம சமரவீர நினைவு உள்ளரங்க அரங்கில் 2025 ஆகஸ்ட் 12 முதல் 15 வரை வெற்றிகரமாக நடைபெற்றதுடன். இதில், வட மத்திய கடற்படை கட்டளை ஆண்களுக்கான ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பையும், மேற்கு கடற்படை கட்டளை பெண்களுக்கான ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பையும் வென்றது.
இந்தப் போட்டியில் அனைத்து கடற்படை கட்டளைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி 09 ஒன்பது ஆண் அணிகளும் ஏழு 07 பெண் அணிகளும் பங்கேற்றன, இறுதி நாளில் கடற்படையின் துணைத் தலைமை அதிகாரியும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதியுமான ரியர் அட்மிரல் சந்திம சில்வா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
அதன்படி, போட்டியில் ஒட்டுமொத்த ஆண்கள் சாம்பியன்ஷிப்பை வட மத்திய கடற்படை கட்டளையும், இரண்டாம் இடத்தை மேற்கு கடற்படை கட்டளையும் வென்றன, அதே நேரத்தில் ஒட்டுமொத்த பெண்கள் சாம்பியன்ஷிப்பை மேற்கு கடற்படை கட்டளை தொடர்ந்து எட்டாவது (08) ஆண்டாகவும், இரண்டாம் இடத்தை பயிற்சி கடற்படை கட்டளையும் வென்றன.
மேலும், சிறந்த வளர்ந்து வரும் வீரருக்கான கோப்பையை வடக்கு கடற்படை கட்டளையைச் சேர்ந்த ஓடினரி சீமன் எஸ்ஆர்எம் செனவிரத்ன வென்றார்.