Intermediate boxing tournament - 2025 போட்டியில் கடற்படை சாம்பியன்ஷிப்பை வென்றது.
இலங்கை குத்துச்சண்டை சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட Intermediate boxing tournament - 2025, 2025 ஆகஸ்ட் 21, அன்று கொழும்பில் உள்ள ராயல் மார்ஸ் எரினா உட்புற குத்துச்சண்டை அரங்கில் நடைபெற்றதுடன், அங்கு நடைபெற்ற போட்டியில் கடற்படை சாம்பியன்ஷிப்பை வென்றது.
அதன்படி, தீவின் 22 புகழ்பெற்ற குத்துச்சண்டை அணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல விளையாட்டு வீர வீராங்கனைகள் பங்கேற்ற இந்தப் போட்டியில், கடற்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பதினெட்டு (18) விளையாட்டு வீரர்கள் பத்து (10) ஆண் எடைப் பிரிவுகளின் கீழும், நான்கு (04) பெண் எடைப் பிரிவுகளின் கீழும் பங்கேற்றனர். அதில், 55 கிலோவுக்குக் குறைவான எடைப் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கடற்படை வீர்ர் கேஎம்ஜிஜி சதுரங்க, போட்டியின் சிறந்த குத்துச்சண்டை வீரருக்கான கோப்பையையும் தங்கப் பதக்கத்தையும் வென்றார். மேலும், 60 கிலோவுக்குக் குறைவான எடைப் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்திய பெடி ஆபீசர் பிஎஸ் குமார, 75 கிலோவுக்குக் குறைவான எடைப் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்திய உடல் பயிற்சியாளர் எஸ்எம்சிஎஸ் சமரநாயக்க, 60 கிலோவுக்குக் குறைவான எடைப் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்திய பெண் எழுத்தர் I ஆர்எம்எஸ்எஸ் ரத்நாயக்க, மற்றும் 70 கிலோவுக்குக் குறைவான எடைப் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்திய பெண் வீராங்கனையான பிஎச்எச் தனஞ்சா ஆகியோர் தங்கப் பதக்கங்களை வென்றனர்.
90 கிலோவுக்கும் குறைவான எடைப் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்திய வானொலி தொழில்நுட்ப வல்லுநர் எம்எம்டி குமாராவும், 54 கிலோவுக்கும் குறைவான எடைப் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்திய பெண் வீராங்கனையான கேஎச் லக்ஷானியும் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர். 90 கிலோவுக்கும் அதிகமான எடைப் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஏபல் சீமன் பிஎச்டிசி த சில்வாவும், 50 கிலோவுக்கும் குறைவான எடைப் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை காலாட்படை வீரர் பிஓகெஅய்சி பிரபாத், 70 கிலோவுக்கும் குறைவான எடைப் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்திய மின்சார நிபுணர் என்டபிள்யூபிஎஸ். கவிந்தாவும், 54 கிலோவுக்கும் குறைவான எடைப் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்திய பெண் களஞ்சிய உதவியாளர் I கேஎம்எம்ஜே. கோனாராவும் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.