2025 கட்டளைகளுக்கு இடையேயான டெனிஸ் சாம்பியன்ஷிப்பை மேற்கு கடற்படை கட்டளை வென்றது
2025 ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 02 வரை திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமி டெனிஸ் மைதானத்தில் நடைபெற்ற கட்டளைகளுக்கு இடையேயான டெனிஸ் சாம்பியன்ஷிப்பை - 2025' மேற்கு கடற்படை கட்டளை வென்றதுடன், இப் போட்டித் தொடரில் பயிற்சி கட்டளை இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
கடற்படை கட்டளைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல வீரர்கள் பங்கேற்ற கட்டளைகளுக்கு இடையேயான இந்தப் போட்டத் தொடருக்கு இணைவாக அமெச்சூர், திறந்த ஒற்றையர் மற்றும் ஜோடிகள் மற்றும் 45 க்கும் மேற்பட்ட ஒற்றையர் மற்றும் ஜோடிகள் என மூன்று (03) பிரிவுகளின் கீழ் நடைபெற்றது.
அதன்படி, அமெச்சூர் பிரிவில் சாம்பியன்ஷிப்பை சிரேஷ்ட கடற்படை வீரரான எம்ஜிஎஸ்ஆர் குமார வென்றார், இரண்டாம் இடத்தை கடற்படை வீரரான (உடல் பயிற்சியாளர்) ஆர்எம்எஸ்என் ராஜகுரு வென்றார்.
இந்தப் போட்டியின் திறந்த ஒற்றையர் சாம்பியன்ஷிப்பை கடற்படை வீரர் (உடல் பயிற்சியாளர்) என்.ஜே.ஆர். ஹேமகுமார வென்றதுடன், இரண்டாம் இடத்தைக் கமாண்டர் சாமர ஜெயருவன் பிடித்தார். திறந்த இரட்டையர் சாம்பியன்ஷிப்பை லெப்டினன்ட் கமாண்டர் ருவன் ஜெயதிலகே மற்றும் கடற்படை வீரர் (உடல் பயிற்சியாளர்) என்.ஜே.ஆர் ஹேமகுமார வென்றனர், கடற்படை வீரர் (உடல் பயிற்சியாளர்) ஆர்.எம்.எஸ்.பி. ரத்நாயக்க மற்றும் தலைமை உடல் பயிற்சியாளர் பி.எம்.எல்.எஸ். குமார ஆகியோர் இரண்டாம் இடத்தைப் பிடித்தனர்.
மேலும், 45 வயதுக்கு மேற்பட்ட ஒற்றையர் சாம்பியன்ஷிப்பை கொமடோர் துலித தேவப்பிரியவும், அதன் இரண்டாம் இடத்தை கொமடோர் தனஞ்சன ராஜபக்ஷவும் வென்ற அதே நேரத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட இரட்டையர் சாம்பியன்ஷிப்பை கொமடோர் அசேல அமரநாத் மற்றும் கெப்டன் நுவன் அரந்தர ஆகியோர் வென்றதுடன், அதன் இரண்டாம் இடத்தை கொமடோர் தனஞ்சன ராஜபக்ஷ மற்றும் கொமடோர் துலித தேவப்பிரிய ஆகியோர் வென்றனர்.
மேலும், ‘கட்டளைகளுக்கு இடையேயான டெனிஸ் சாம்பியன்ஷிப் - 2025' பரிசு வழங்கும் விழா கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ரவீந்திர திசேரவின் தலைமையில் நடைபெற்றதுடன், மேலும் கிழக்கு கடற்படை கட்டளை உட்பட அனைத்து கட்டளைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் குழு இந்த நிகழ்வில் கலந்து கொண்டது.