TAEKWONDO POOMSAE CHAMPIONSHIP 2025 இல் கடற்படை பல வெற்றிகளைப் பெற்றது
இலங்கை டேக்வாண்டோ கூட்டமைப்பு ஏற்பாடு செய்த, 2025 செப்டம்பர் 06 ஆம் திகதி நடைபெற்ற TAEKWONDO POOMSAE CHAMPIONSHIP 2025 இல் கடற்படை சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியதுடன், மூன்று (03) தங்கப் பதக்கங்கள், ஒரு வெள்ளிப் பதக்கம் (01) மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை (02) வென்றது.
இந்தப் போட்டி 2025 செப்டம்பர் 06 ஆம் திகதி வத்துபிட்டிவலவில் உள்ள விளையாட்டு அமைச்சின் உட்புற உடற்பயிற்சி கூடத்தில் நடைபெற்றது. இதில் முப்படைகள் மற்றும் காவல்துறை உட்பட தீவின் பிரபலமான டேக்வாண்டோ கழகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
அதன்படி, தனிநபர் மற்றும் குழுப் போட்டிகளில் போட்டியிட்ட கடற்படை அணி, சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தி, மூன்று (03) தங்கப் பதக்கங்கள், ஒரு (01) வெள்ளிப் பதக்கம் மற்றும் இரண்டு (02) வெண்கலப் பதக்கங்களை வென்றது.
மேலும், சீனியர் டேக்வாண்டோ ‘Poomsae’ பிரிவில் கடற்படை முதல் மற்றும் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.