13வது பாதுகாப்பு சேவைகள் மோட்டார் சைக்கிள் பந்தய போட்டியில் மோட்டார் சைக்கிள் பிரிவில் கடற்படை வெங்கலப் பதக்கத்த பெற்றது

13வது பாதுகாப்பு சேவைகள் பந்தய போட்டித்தொடரில் 2025 செப்டம்பர் 11 ஆம் திகதி சாலியபுர இராணுவ பந்தய மைதானத்தில் நடைபெற்றதுடன், இதில் கடற்படை Racing 125 CC மோட்டார் சைக்கிள் பிரிவில் மூன்றாம் இடத்தைப் பிடித்தது.

இந்தப் போட்டியில் முப்படை மோட்டார் சைக்கிள் அணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல வீரர்கள் பங்கேற்றதுடன், மோட்டார் சைக்கிள் ஐந்து (05) போட்டிகளின் கீழ் நடைபெற்ற போட்டிகளில் Racing 250 CC, Racing 125 CC, Standard 250 CC, Standard 125 CC மற்றும் Super Mortard Race - 01 கடற்படையின் உயர் மோட்டார் சைக்கிள் பந்தய அணியைச் சேர்ந்த எட்டு (08) விளையாட்டு வீரர்கள் இந்தப் பிரிவுகளில் பங்கேற்றனர். அங்கு, Racing 125 CC பிரிவில் போட்டியிட்ட கெப்டன் ஜிஏ நிஷாந்த, கடற்படைக்கு மூன்றாவது (03) இடத்தைப் பிடித்தார்.