9வது கடற்படை திறந்த துப்பாக்கி சுடும் போட்டியில், கடற்படை ஏராளமான வெற்றிகளைப் பெற்றது

9வது கடற்படை திறந்த துப்பாக்கி சுடும் போட்டி - 2025, வெலிசர கடற்படை துப்பாக்கி சுடும் வளாகத்தில் 2025 அக்டோபர் 16 முதல் 28 வரை நடைபெற்றது, இதில் இலங்கை கடற்படை துப்பாக்கி சுடும் அணியானது பல வெற்றிகளைப் பெற்றது.

போட்டியின் பரிசு வழங்கும் விழா 2025 அக்டோபர் 28 ஆம் திகதி கடற்படையின் மின் மற்றும் மின்னணு பொறியியல் இயக்குநர் ஜெனரல் ரியர் அட்மிரல் பிரதீப் கருணாதிலகவின் தலைமையில் நடைபெற்றது, மேலும் வெற்றியாளர்களுக்கு கடற்படையின் மின் மற்றும் மின்னணு பொறியியல் இயக்குநர் ஜெனரல் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

இலங்கை கடற்படை, இலங்கை இராணுவம், இலங்கை விமானப்படை மற்றும் பாடசாலை துப்பாக்கி சுடும் சங்கங்கள் உட்பட தீவின் புகழ்பெற்ற துப்பாக்கி சுடும் கழகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல விளையாட்டு வீர வீராங்கனைகள் இந்தப் போட்டியில் பங்கேற்றனர், மேலும் கடற்படை துப்பாக்கி சுடும் அணியின் விளையாட்டு வீரர்களுக்கு பல வெற்றிகளைப் பெற முடிந்தது.

அதன்படி, 10m Air Rifle Open (Women) Individual போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை லீடிங் லீடிங்கொம் சிஏபிகே அபேகுணவர்தனவும், 25m Military Rapid Fire Pistol (Men) Individual போட்டியில் தங்கப் பதக்கத்த்தை சீப் பெட்டி ஒப்பிசர் டபிள்யூஎம்கே குமாரவும், 25m Military Rapid Fire Pistol (Women) Individual போட்டியில் கடற்படை பெண் மாலுமி டிஎன்கே சூரியாராச்சியும் 25m Rapid Fire Pistol (Men) Individual போட்டியில் சீப் பெட்டி ஒப்பிசர் டபிள்யூஎம்கே குமாரவும் வெள்ளிப் பதக்கத்தை வென்றனர்.

50m Free pistol (Men) Individual போட்டியில் எல்டிஏ டிஎம்எஸ்எம் திசாநாயக்க வெள்ளிப் பதக்கத்தையும், சீப் பெட்டி ஒப்பிசர் ஆர்டி.எம்சிஎச் லியனகே வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். 50m Rifle Prone (Men) Individual போட்டியில் லீடிங் பெற்றமன் எச்டிபி குமார தங்கப் பதக்கத்தையும், அதே போட்டியில் எல்ஆர்ஈஎம் யுடிஎஸ் ரங்கநாத் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர். 50m Rifle 3x20 (Men) Individual போட்டியில் எல்ஆர்ஈஎம் யுடிஎஸ் ரங்கநாத் தங்கப் பதக்கத்தையும் லீடிங் பெற்றமன் எச்டிபி குமார வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

50m Rifle 3x20 (Women) Individual போட்டியில் தங்கப் பதக்கத்தை லீடிங்கொம் சிஏபிகே அபேகுணவர்தனவும், வெள்ளிப் பதக்கத்தை லீடிங் வுமன் சீமன் பிஎல்டி சந்தமாலியும், வெண்கலப் பதக்கத்தை லீடிங் வுமன் சீமன் கேஆர்எச் உமயங்கனவும் வென்றனர்.

50m Rifle 3x20 (Women) Individual போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை லீடிங் வுமன் கொம் சிஏபிகே அபேகுணவர்தனவும், வெண்கலப் பதக்கத்தை லீடிங் வுமன் சீமன் பிஎல்டி சந்தமாலியும் வென்றனர்.