19வது தேசிய வுஷு சாம்பியன்ஷிப்பில் கடற்படை விளையாட்டு வீரர்கள் பல வெற்றிகளைப் பெற்றனர்

2026 ஜனவரி 30 முதல் பெப்ரவரி 01 வரை நிட்டம்புவ வதுபிட்டிவல உள்ளக அரங்கில் நடைபெற்ற 19 வது தேசிய வுஷு சாம்பியன்ஷிப்பில் கடற்படை விளையாட்டு வீரர்கள் ஏராளமான வெற்றிகளைப் பெற்றனர்.

அதன்படி, இருபத்தைந்து (25) கடற்படை விளையாட்டு வீரர்கள் தாவுலு (Taolu) மற்றும் சண்தா (Sanda) ஆகிய இரண்டு நிகழ்வுகளையும் வெற்றிகரமாக முடித்ததுடன், மேலும் நடைபெற்ற பத்து (10) தாவுலு போட்டிகளில், கடற்படை விளையாட்டு வீரர்களால் ஒன்பது (09) தங்கப் பதக்கங்கள், இரண்டு (02) வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் இரண்டு (02) வெண்கலப் பதக்கங்களை வெல்ல முடிந்தது.

இதேபோல், பதினொரு (11) எடைப் பிரிவுகளின் கீழ் நடைபெற்ற சாண்டா போட்டியில் கடற்படை விளையாட்டு வீரர்கள் ஆறு (06) தங்கப் பதக்கங்கள், ஆறு (06) வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் இரண்டு (02) வெண்கலப் பதக்கங்களையும் வென்றனர்.