2026 ஆம் ஆண்டுக்கான இலங்கை செவன்ஸ் மகளிர் ரக்பி சாம்பியன்ஷிப் போட்டியில் கடற்படை மகளிர் அணி 8 வது முறையாக வெற்றி பெற்றது
இலங்கை ரக்பி சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2026 இலங்கை செவன்ஸ் மகளிர் ரக்பி போட்டியின் முதல் கட்டப் போட்டி 2026 மார்ச் 21 மற்றும் 22 ஆகிய திகதிகளில் கொழும்பு CR&FC மைதானத்திலும், இரண்டாம் கட்டப் போட்டி 2026 மார்ச் 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் கொழும்பு சர்வதேச பந்தய மைதானத்திலும் நடைபெற்றது. இப்போட்டியின் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை கடற்படை மகளிர் ரக்பி அணி வென்றது.
அதன்படி, இந்தப் போட்டித்தொடரில், கடற்படை மகளிர் அணி, விமானப்படை மகளிர் அணியை 22-07 என்ற புள்ளிக்கணக்கிலும், இராணுவப்படை மகளிர் அணியை 15-10 என்ற புள்ளிக்கணக்கிலும் தகுதிச் சுற்றில் தோற்கடித்து, போட்டித்தொடரின் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை கடற்படை வென்றது.


