6 வது ஆசிய மகளிர் கடற்கரை கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம் பெற்றுத் தருவதில் கடற்படை வீராங்கனைகள் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர்

2026 ஏப்ரல் 26 முதல் 30 வரை சீனாவின் சான்யாவில் நடைபெற்ற 6 வது ஆசிய கடற்கரை கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய இலங்கை மகளிர் கபடி அணி, ஒட்டுமொத்தப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. கடற்படை கபடி அணியின் உறுப்பினர்களான வுமன் லீடின் சீமன் ஏபிஎம் ஹன்சமாலி மற்றும் வுமன் ஏபல் சீமன் ஆர் பிரியவர்ணா ஆகிய பெண் மாலுமிகளும் இந்த அணியில் பங்கேற்றனர்.

ஏழு (07) நாடுகள் பங்கேற்று நடைபெற்ற இந்த கபடிப் போட்டியின் மகளிர் இறுதிப் போட்டிக்கு இந்தியாவும் இலங்கையும் தகுதி பெற்றன, மேலும் விறுவிறுப்பான போட்டிக்குப் பிறகு, இலங்கை இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

போட்டித்தொடர் முழுவதும் இலங்கை மகளிர் அணியை வழிநடத்திய வுமன் லீடின் சீமன் ஏபிஎம் ஹன்சமாலியின் சிறப்பான தலைமைத்துவமும், ஏபல் சீமன் ஆர் பிரியவர்ணாவின் அபாரமான விளையாட்டு மனப்பான்மையும் குறிப்பாகக் குறிப்பிடத்தக்கவை. மேலும், இந்த வெற்றி இலங்கைக்கும் கடற்படைக்கும் பெரும் பெருமையைக் கொண்டுவந்தது.