Taekwondo Poomsae Championship 2026 போட்டித் தொடரில் கடற்படை பல வெற்றிகளைப் பெற்றது
2026 மே 10 அன்று இலங்கை டேக்வாண்டோ சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட (Taekwondo Poomsae Championship 2026) இல் கடற்படை சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தி இரண்டு (02) தங்கப் பதக்கங்கள், நான்கு (04) வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் ஐந்து (05) வெண்கலப் பதக்கங்களை வென்றது.
இப்போட்டியானது, 2026 மே 09 மற்றும் 10 ஆம் திகதிகளில் வட்டுபிட்டிவலாவில் உள்ள விளையாட்டு அமைச்சக உள்ளரங்க உடற்பயிற்சிக் கூடத்தில், முப்படைகள் மற்றும் காவல்துறை உட்பட, தீவில் உள்ள புகழ்பெற்ற டேக்வாண்டோ கழகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல விளையாட்டு வீரர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
அதன்படி, தனிநபர் மற்றும் குழுப் போட்டிகள் இரண்டிலும் போட்டியிட்ட கடற்படை அணி, சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தி இரண்டு (02) தங்கப் பதக்கங்கள், நான்கு (04) வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் ஐந்து (05) வெண்கலப் பதக்கங்களை வென்றது.













