விளையாட்டு செய்திகள்
2023 கட்டளைகளுக்கு இடையேயான ஆறுபேர் கொண்ட மகளிர் மென்பந்து கிரிக்கெட் போட்டித்தொடரில் சாம்பியன்ஷிப்பை மேற்கு கடற்படை கட்டளை வென்றது
2023 கட்டளைகளுக்கு இடையேயான ஆறுபேர் கொண்ட மகளிர் மென்பந்து கிரிக்கெட் போட்டித்தொடர் 2023 ஜூன் மாதம் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் வெலிசர கடற்படை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றதுடன் இறுதிப் போட்டியில் பிரதம அதிதியாக கடற்படை கிரிக்கெட் குழுவின் தலைவர் ரியர் அட்மிரல் ஜலாஜ் பொன்னம்பெரும கலந்து கொண்டார்.
29 Jun 2023
12வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுப் போட்டித்தொடரில் ஆண்கள் மற்றும் பெண்கள் அரை மரத்தன் போட்டியில் கடற்படை இரண்டாம் இடத்தை வென்றது.
கட்டுநாயக்க, இலங்கை விமானப்படை தள மைதானத்தில் 2023 ஜூன் 24 ஆம் திகதி நடைபெற்ற 12வது பாதுகாப்பு சேவைகள் தடகள போட்டித்தொடரில் ஆண்கள் மற்றும் பெண்கள் அரை மாரத்தன் போட்டியில் இரண்டாம் இடத்தை கடற்படை வென்றது.
26 Jun 2023
12வது பாதுகாப்பு சேவைகள் ஹொக்கி போட்டித்தொடரில் சாம்பியன்ஷிப்பை கடற்படை மகளிர் அணி வென்றது
2023 ஜூன் மாதம் 23 ஆம் திகதி ஏகல, இலங்கை விமானப்படை மைதானத்தில் நடைபெற்ற 2022/2023 12வது பாதுகாப்பு சேவைகள் ஹொக்கி போட்டித்தொடரில் சாம்பியன்ஷிப்பை கடற்படை மகளிர் ஹொக்கி அணி வென்றது.
26 Jun 2023
கட்டளைகளுக்கு இடையேயான மேசைப்பந்து போட்டித்தொடரில் சாம்பியன்ஷிப்பை மேற்கு கடற்படை கட்டளை வென்றது
கட்டளைகளுக்கு இடையேயான மேசைப்பந்து போட்டித்தொடர் 2023 ஜூன் மாதம் 20 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை இலங்கை கடற்படை கப்பல் கெமுனு நிருவனத்தில் உள்ள கொமாண்டர் பராக்கிரம சமரவீர நினைவு உள்ளக அரங்கில் நடைபெற்றது. இதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை மேற்கு கடற்படை கட்டளை வென்றதுடன் வடக்கு கடற்படை கட்டளை இரண்டாம் இடத்தை வென்றது.
25 Jun 2023
தாய்நாட்டிற்காக தங்கப் பதக்கங்களை வென்ற கடற்படை விளையாட்டு வீர வீராங்கணைகளுக்கு பணப் பரிசுகள் வழங்கப்பட்டன
ஜப்பான் மற்றும் டுபாயில் நடைபெற்ற தடகளப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்ற கடற்படை வீராங்கணை கயந்திகா அபேரத்ன மற்றும் கடற்படை பரா தடகள வீர்ர் எஸ்.எம்.ஏ.எஸ்.எம்.சுபசிங்க ஆகியோர் தங்களின் பதக்கங்கள் மற்றும் விருதுகளுடன், இன்று (2023 ஜூன் 20) இலங்கை கடற்படை விளையாட்டு சபையின் தலைவரான கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தனர். தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்த இவர்களது செயற்பாடுகளை பாராட்டிய வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, இரு விளையாட்டு வீரர்களுக்கும் பணப்பரிசுகளை வழங்கி அவர்களின் விளையாட்டு வாழ்க்கையை தொடர ஊக்குவித்தார்.
20 Jun 2023
'கடற்படைத் தளபதி கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடர் - 2023' தெற்கு மண்டலம் வென்றது
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் தலைமையில் 2023 ஜூன் மாதம் 09 ஆம் திகதி வெலிசர கடற்படை வளாக கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 'கடற்படைத் தளபதி கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடர் - 2023' (Commander of the Navy’s Cup) மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட் சுற்றுப்போட்டியாக நடைபெற்றதுடன் அதன் வெற்றி கிண்ணம் தெற்கு மண்டலம் வென்றதுடன் இரண்டாம் இடம் வடக்கு மண்டலம் பெற்றுள்ளது.
10 Jun 2023
12வது பாதுகாப்பு சேவைகள் நீச்சல் மற்றும் வாட்டர் போலோ போட்டித்தொடரில் முதலாம் இடம் மற்றும் இரண்டாம் இடம் கடற்படை நீச்சல் அணிகள் வென்றன.
2023 ஜூன் மாதம் 05 ஆம் திகதி முதல் 09 ஆம் திகதி வரை இலங்கை கடற்படை கப்பல் கெமுனு நிருவனத்தின் நீச்சல் தடாகத்தில் நடைபெற்ற 12 ஆவது பாதுகாப்பு சேவைகள் நீச்சல் மற்றும் வாட்டர் போலோ போட்டித்தொடரில், கடற்படை மகளிர் நீச்சல் குழு நீச்சல் சம்பியன்ஷிப்பை வென்றதுடன், கடற்படையின் ஆண்கள் நீச்சல் குழு இரண்டாம் இடத்தை வென்றது.
10 Jun 2023
12வது பாதுகாப்பு சேவைகள் கால்பந்து போட்டித்தொடரில் மகளிர் சாம்பியன்ஷிப்பை கடற்படை வென்றது
இலங்கை இராணுவத்தால் ஏற்பாடுசெய்யப்பட்ட 12வது பாதுகாப்பு சேவைகள் கால்பந்துப் போட்டித்தொடர் 2023 மே 03 முதல் 22 வரை கொழும்பு குதிரைபந்தய மைதானத்தில் வெற்றிகரமாக நடைபெற்றதுடன் இதில் கடற்படை மகளிர் கால்பந்து அணி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை வென்றதுடன் கடற்படை ஆண்கள் அணி இரண்டாம் இடத்தை வென்றது.
24 May 2023
இலங்கை தேசிய துப்பாக்கி சங்கத்தின் நிர்வாக அதிகாரத்தை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது
2023 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான இரண்டு வருட காலப்பகுதிக்கு இலங்கை தேசிய துப்பாக்கி சங்கத்தின் நிர்வாகப் பணிகள் இலங்கை இராணுவத்திடம் இருந்து இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கும் நிகழ்வு 2023 மே 18 ஆம் திகதி கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது.
20 May 2023
ஜப்பானில் நடைபெற்ற தடகள போட்டி தொடரொன்றில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை கடற்படை வீராங்கனை கயந்திகா அபேரத்ன தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
ஜப்பானில் நடைபெறுகின்ற 39வது சிஷோகா மற்றும் 10 வது கினாமி மவிதகா நினைவு தடகள போட்டித்தொடர் – 2023 (39th Shizuoka Meet & 10th Kinami Machitaka Memorial Athletics Meet – 2023) இல் 2023 மே 03 அன்று நடைபெற்ற 800m பெண்கள் ஓட்டப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற இலங்கை கடற்படையின் கடற்படை விராங்கனை கயந்திகா அபேரத்ன தங்கப் பதக்கத்தை வென்றார்.
05 May 2023