EVENT NEWS 2026

இலங்கைக்கான துருக்கி குடியரசின் கௌரவ தூதுவர் உத்தியோகப்பூர்வ சந்திப்பிற்காக கடற்படை தளபதியை சந்தித்தார்

06 Aug 2026

இலங்கைக்கான துருக்கி குடியரசின் தூதுவர் மதிப்புக்குரிய Semih Lütfü Turgut அவர்கள், இன்று (2026 ஆகஸ்ட் 06) கடற்படை தலைமையகத்தில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவை உத்தியோகப்பூர்வ சந்திப்பு ஒன்றிற்காக சந்தித்தார்.

இந்த உத்தியோகப்பூர்வ சந்திப்பின் போது, இலங்கைக்கான துருக்கி குடியரசின் தூதுவர், 27 ஆவது கடற்படை தளபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவிற்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு உள்ளிட்ட இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து சுமூகமான உரையாடலில் ஈடுபட்டனர்.

இந்த உத்தியோகப்பூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையில் நினைவுப் பரிசுகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

Accessibility Tools